வீட்டில் உள்ள தேவையில்லாத பழைய பொருட்களை ஒன்றாக சேர்த்து எடுத்து வந்து நடுரோட்டில் போட்டு விடிகாலையில் தீ வைத்து எரித்து விட்டு, "பழையன கழிதலும், புதியன புகுதலும்" என்ற அடிப்படையில்தான் போகி பண்டிகையே கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இப்போது போகி பண்டிகையை கொண்டாட வேண்டாம் என்று அரசு அறிவித்துள்ளது. இது சம்பந்தமாக தமிழக அரசின் ஒரு அறிவிப்பில் சொல்லி உள்ளதாவது:
நச்சு வாயுக்கள் "பிளாஸ்டிக், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது. இவற்றை எரிப்பதால் வெளிப்படும் நச்சு வாயுகளால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்றவை ஏற்படுகின்றன.
இந்த அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. அதனால் போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டும்" என்று தமிழக அரசின் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
ஆண்டாண்டு காலமாக வெடி வெடித்து தீபாவளியும், மேளம் அடித்து போகியும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்துக்களின் உணர்வு, வழிபாடு, கலாச்சாரம், பழக்கவழக்கங்களில் கலந்துபோன பண்டிகைகளுக்கு இப்படிப்பட்ட இடையூறுகள் பிற்காலத்தில் வரும் என்று அன்றைய நாட்களில் நமக்கு தெரியாது.