சாப்பிடும் போது, உணவில் உமிழ்நீர் கலக்க வேண்டும். எச்சில் கலந்த உணவு மட்டுமே, ரத்தத்தில் கலக்கிறது. எச்சில் கலக்காத உணவு, கெட்ட பொருளாகி விடும். எச்சிலில் நொதிகள் உள்ளன. உணவில் உள்ள மூலக்கூறுகளைப் பிரிக்க இவை உதவுகின்றன.
உதட்டைப் பிரித்து உணவை மெல்பவரின் எச்சில் உணவுடன் கலப்பது இல்லை. உதட்டை மூடி, மெல்ல வேண்டும்.
உதட்டைப் பிரித்து சாப்பிட்டால், காற்று வாய்க்குள் சென்று, உணவுக்கும், எச்சிலுக்கும் தடையாகி, ஜீரணத்தை கெடுக்கும். வாயில் நடக்கும் ஜீரணத்திற்கு, காற்று எதிரி.
அமெரிக்கா, ஐரோப்பாவில் உள்ள இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளில், சர்க்கரை நோயாளிகள் மிகவும் குறைவு. ஏனென்றால், இங்குள்ளவர்கள், உதட்டை மூடி சாப்பிடுவர்.
உதட்டை மூடி சாப்பிட துவங்கும் போது, ஒரு வாரத்திற்கு, தாடை வலிக்கும். புதுப் பழக்கம் என்பதால் இது நடக்கும்!
வலியை தாங்கி, பொறுமை காத்தால், வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்கும்.