மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Thursday, 24 January 2019

இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக இருக்கலாம்

    ராஜாவின் குடும்பம் மிகப்பெரியது, அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர், ராஜா ஒரு கடின உழைப்பாளி, அவர் ஒரு நாளைக்கு 16 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்பவர். 


    அவர் அதிகாலையில் வீட்டிலிருந்து வெளியேறி, நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்கு வருவதால் குழந்தைகளால் அவரை பார்க்க முடியாது. ராஜாவின் கடின உழைப்பால் நிறைய நன்மைகளை சம்பாதித்தார், பதவி உயர்வுடன் அவருக்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டது.

   இருப்பினும், வழக்கம் போல், ராஜா மேலும் மேலும் பணம் சம்பாதிக்க தொடங்கினார். ஒரு நாள் அவருடைய மனைவி, 'நீங்கள் ஏன் பணம் சம்பாரிக்க இப்படி ஓடுகிறீர்கள்? நம்மிடம் இப்போது இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக இருக்கலாம்" என்று கூற ராஜா உடனே, 'உங்கள் அனைவருக்கும் உலகில் மிகச் சிறந்ததை நான் வழங்க விரும்புகிறேன், நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று பதிலளித்தார்.

      இரண்டு வருடங்கள் கடந்து விட்டது, ராஜாவிற்கு அவரது அலுவலகத்தில் பங்கு வழங்கப்பட்டது. இப்போது, ராஜாவின் குடும்பம் அந்த நகரில் பணக்கார குடும்பங்களுள் ஒன்றானது. ஒரு நாள் ராஜாவின் குடும்பத்தில் உள்ள அனைவரும் கடற்கரை வீட்டிற்குச் சென்றார்கள், அப்போது ராஜாவின் மகள் 'அப்பா, வீட்டில் ஒரு நாள் எங்களுடன் தங்க உங்களால் முடியுமா?" என்று கேட்க, ராஜா 'நாளைக்கு நான் மதிய உணவை உங்களுடன் சாப்பிட வருகிறேன்" என்றார். இதைக் கேட்ட, முழு குடும்பமும் மிகவும் மகிழ்ச்சியடைந்தது. 

     துர்திருஷ்டவசமாக, அடுத்த நாள் சுனாமியில் ராஜாவின் குடும்பத்தில் உள்ள அனைவரும் அடித்துச் செல்லப்பட்டனர், யாரும் உயிரோடு இல்லை! அடுத்த நாள் அவர் தனது கடற்கரை வீட்டை அடைய முயற்சித்தபோது, சுற்றி உள்ள இடங்களில் நீர் சூழ்ந்திருப்பதை பார்த்தார். அவருடைய குடும்ப உறுப்பினர்களுடைய சடலங்களை கூட அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்போது அவர் மனைவியின் வார்த்தைகளை நினைவு கூர்ந்தார், 'நீங்கள் ஏன் பணம் சம்பாரிக்க இப்படி ஓடுகிறீர்கள்? நம்மிடம் இப்போது இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக இருக்கலாம்" என்று.

Pages