ஈரநிலங்களைப் பாதுகாப்பதன் மூலம் பல்லுயிர் வளங்கள் மற்றும் கலாச்சாரம் பாதுகாக்கப் படவேண்டும் என்று பிப்ரவரி மாதம் 2ந்தேதி 1971ஆம் ஆண்டில் ஈரான் நாட்டின் கரீபியன் கடற்பகுதியில் ராம்சர் என்னுமிடத்தில் ஈரநிலங்களைப் பாதுகாத்தல் சம்பந்தமாக நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
ஈரநிலங்களின் பயன்கள்
• சூழலியல், பொருளாதார சமூக ரீதியில் மனிதனுக்கு மறைமுகமாக பங்களிப்பினை வழங்குகின்றன.
• அதிக மழை கிடைக்கும் காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படாமல் பாதுகாக்கின்றன.
• கட்டுக்கடங்காது காட்டாறாக பெருகி ஓடும் ஆறுகளை அடக்கியாண்டு குளங்களில் தேக்குவதும், வயல் நிலங்களில், வெள்ளச் சமவெளிகளில் பாய்ந்து அமைதியடைவதும் சதுப்பு நிலங்களில் வடிமானம் அடைய வைப்பதும் இந்த நிலங்களே.
• ஆற்றுப் பெருக்குக் காலங்களிலும், கடலலை செயற்பாடுகளின் போதும் சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளின் போதும் கடற்கரை அரிப்புச் செயற்பாடுகளை சதுப்புநில தாவரங்களாலும், கற்பாறைத் தொடர்களாலும் நுரை போட்டு வரும் ஆக்ரோஷ அலைகளினை தடைபோட்டு நிற்பதுவும் இவ் ஈரநிலங்களே.
• வண்டல் கலந்த நீரானது ஈரநிலங்களினூடாக செல்கின்ற போது கடற்கரை சதுப்புநிலத்தாவரங்கள் போன்றவற்றால் தடுக்கப்பட்டு வண்டல்களை படிய வைக்கின்றன.
• புயற்காலங்களில் ஏற்படும் கரையோர மண் அரிப்பை தடுக்கின்றது.• நீரை தூய்மையாக்குதல் இந்த நிலங்களின் முக்கியபயனாகும். மேற்ப்பரப்புநீர்களில் கரைந்துவரும் ரசானங்களை நீக்கும் ஒரு வடிகட்டியாக இது செயல்பட்டு தரைக்கீழ் நீரின் தரத்தை பாதுகாக்கிறது.
• ஒரு பிரதேசத்தின் இடம்சார் காலநிலை (வுழிழ- ஊடiஅயவந) நுண் காலநிலை (ஆiஉசழ ஊடiஅயவந) ஆகியவற்றின் தன்மைகளை பேணுவதிலும் இவை முக்கியமான பங்களிப்பினையே செய்கின்றன. இதனால் மிதமான வெப்பநிலை நிலவுவதற்கும் மனித சௌகரிய நிலையை ஏற்படுத்தவும் இவை காரணமாகின்றன.
• விவசாய உற்பத்திகளையும் நீர்ப்பாசன தேவைகளையும், குடிநீரையும் பெற்றுக் கொள்ள குளங்கள், நீர்த் தேக்கங்கள் என்ற பெயரிலும் நீர் மின்சாரத்தை பெறுவதில் என பயன்படுகிறது.
• கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களாக விளங்குகின்றது.