மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Sunday, 3 February 2019

வரலாற்றில் இன்று பிப்ரவரி 03 !

சார்லஸ் ஹென்றி டர்னர்
Image result for சார்லஸ் ஹென்றி டர்னர்
          உயிரியலாளரும், கல்வியாளருமான சார்லஸ் ஹென்றி டர்னர் 1867ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி அமெரிக்காவிலுள்ள ஓஹியோ மாநிலம், சின்சினாட்டியில் பிறந்தார்.

        முதுகெலும்பில்லாத உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சியில் குறிப்பாக பூச்சிகளின் கேட்கும் திறன், காட்சித் திறன் மற்றும் அவற்றின் கற்றல் திறன், வேட்டையாடும் திறன் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபடத் தொடங்கினார்.

        தனது ஆராய்ச்சிகள் குறித்து 49 கட்டுரைகளை இவர் வெளியிட்டுள்ளார். பூச்சிகள் ஓசைகளின் தன்மைகளுக்கு ஏற்ப எதிர்வினை புரிவதையும் கண்டறிந்தார்.

      பூச்சிகள் முந்தைய அனுபவங்கள் வாயிலாகத் தங்கள் பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவை என்பதையும் கண்டறிந்தார். விஞ்ஞான ஆராய்ச்சிகள் தவிர, ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் சமூக மேம்பாட்டுக்காகவும், கல்வி அறிவு பெறவும் இவர் கடுமையாகப் போராடினார்.

       விலங்கியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கரான இவர் தனது 56வது வயதில் (1923) மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்
       1468ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி அச்சு இயந்திரத்தை (Pசiவெiபெ pசநளள) கண்டுபிடித்த ஜெர்மானியர் குட்டன்பேர்க் மறைந்தார்.

Pages