சர்வதேச ரீதியில் உலக புற்று நோய் தினம் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 04 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.
2014ம் ஆண்டுக்கான இத்தினத்தின் தொனிப்பொருள், 'மாயத்திரையை அகற்றி உண்மையைப் பாருங்கள்' என்பதாகும். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் மருத்துவ உலகில் மிக முக்கியமான தினமாக பார்க்கப்படுகின்றது
உலகளவில் புற்றுநோய் ஒழிப்பிற்கான ஒரு மாநாடு பாரிஸ் நகரில் 2000ஆம் ஆண்டு பிப்ரவரி 4 இல் நடைபெற்றது. இம்மாநாட்டில் உலகில் புற்றுநோயை ஒழிப்பது என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கல்வி, விழிப்புணர்வு மூலமாக புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பது மற்றும் சிகிச்சைமுறை போன்றவற்றை சமூகத்திற்கு போதிப்பது என்கின்ற குறிக்கோளின் அடிப்படையில் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.