நீதிக்கதை
ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வசித்து வந்தது. அது தனது பலத்தாலும், தோற்றத்தாலும், கர்ஜனையாலும் காட்டில் வசித்த அனைத்து மிருகங்களையும் பயமுறுத்தி வந்தது.
பயம் காரணமாய் அனைத்து மிருகங்களும் சிங்கத்திற்கு அருகில் செல்வதில்லை. சிங்கத்தைக் கண்டால் பயந்து ஓடிவிடுகின்றன.
ஆனால் ‘ஈ” ஒன்று பயமின்றி சிங்கத்தின் மீது வந்து அமர்ந்தது. அதைப் பார்த்ததும் சிங்கம் கோபமுற்று கர்ஜனை செய்தபடியே.. "உன்னை என் பற்களால் கடித்துக் குதறுவேன், நகங்களால் விறாண்டுவேன், நசுக்கிப் பொசிக்கிப் போடுவேன்" என்றது.
அதற்கு ஈயோ நீ பலசாலியாய் இருக்கலாம்.. உன்னைப் பார்த்து மற்ற மிருகங்கள் பயப்படலாம். ஆனால் நான் பயப்படமாட்டேன். இன்னும் சொல்லப்போனால்.. நீ சொன்னபடி உன்னையே நீ பற்களால் கடித்துக் கொள்ளவும், நகங்களால் விறாண்டிக் கொள்ளவும் செய்வேன்” என்றது.
இதைக் கேட்ட சிங்கம் கோபத்துடன் இயலுமாயின் அதைச் செய் என் சவால் விட.. ஈ பறந்து வந்து சிங்கத்தின் முதுகில் அமர்ந்து அதைக் கடித்தது. ஈ முதுகில் அமர்ந்த போது.. அதை விரட்ட சிங்கம் தன் பற்களால் முயன்ற போது.. ஈ பறந்து விட சிங்கம் தன் முதுகைத் தானே கடித்துக் கொண்டது.
ஈ சிங்கத்தின் முகத்தில் அமர்ந்த போது, அதை விரட்ட தன் கால் நகங்களால் முயல.. ஈ பறக்க… சிங்கம் தன் நகங்களால் தன் முகத்தையே விறாண்டிக் கொண்டது. இவ்வாறு பலதடவை சிங்கத்தை நன்கு இம்சை செய்து விட்டு ஈ பறந்தது.
சிங்கத்தினால் ஈயை பிடிக்கவோ நசுக்கவோ முடியவில்லை. அதனால் சிங்கம் தன் இயலாமையை எண்ணி வெட்கப்பட்டது. அதன் பின்புதான் சிங்கத்திற்கு புரிந்தது. தான் உடலளவில் வீரமாய் இருந்தாலும்.. ஒரு சிறு ஈ தன்னை இம்சைப் படுத்தி விட்டதே என்று..
உருவத்தைக் கண்டு யாரையும் எடை போடக் கூடாது.
இதைத்தான் வள்ளுவரும்..
உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னார் உடைத்து
என்றார்.
பொருள்-
உருவத்தால் சிறிதாக இருந்தாலும் அதை கேலி செய்து அலட்சியப் படுத்தக் கூடாது. பெரிய தேர் ஓடக் காரணமாய் இருப்பது சிறிய அதன் அச்சாணியே.
Today's Headlines
* Chairman of the Central Board of Direct Taxes, Sushil Chandra, appointed as the Election Commissioner of India.
* 40 CRPF soldiers killed in the terrorist attack in Kashmir.
* In Manaparai, Vayampatti - Karunkulam Government Higher Secondary School is giving 3 times break for drinking water. The parents have welcomed this drinking habit which will protect student's health.
* The water level of Periyar dam reduced. There might be a water scarcity in the southern districts of Tamilnadu.
* England won the final Test. The West Indies won the test cricket series.