துளி...துளி..!
பாப்சிக்கள் என்ற பெயர் கொண்ட குச்சி ஐஸை முதன்முதலில் தயாரித்தவர், அமெரிக்காவைச் சேர்ந்த பிராங்க் எபெர்சன்.
உலகின் 17 பல்கலைக்கழகங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர், டாக்டர் ராதாகிருஷ்ணன்.
முதன்முதலில் தொல்பொருள் காட்சியகம் 1814-ம் ஆண்டு கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது.
விலை உயர்ந்த பொருட்களைப் பாதுகாத்து வைக்கும் பெட்டகம் முதன்முதலில் 1865-ல் நியூயார்க்கில் துவங்கப்பட்டது.
பூச்சி இனத்தில் அதிக காலம், அதாவது 50 ஆண்டுகள் உயிர் வாழும் பூச்சி ராணி கரையான் ஆகும்.
உலகிலேயே எழுத்தாளர் பெயரால் அமைந்திருக்கும் தீவு ஸ்காட்லாந்தில் உள்ள ரூசோ தீவுதான்.