![](https://tamilthesiyan.files.wordpress.com/2018/01/wp-1517339824206.jpg)
பா.வே.மாணிக்க நாயக்கர் சேலம் மாவட்டம் பாகல்பட்டி என்னும் சிற்றூரில் 1871-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி பிறந்தார். வேங்கடசாமி நாயக்கர் - முத்தம்மையார். சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் பயின்றவர்.
அறிவியல் தமிழ் வளர்த்த தமிழறிஞர் ஆவார். சென்னையில் பொறியியல் கல்வி கற்ற இவர் சென்னை அரசின் அளவைப் பெரும் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஒலி நூலாராய்ச்சியில் ஈடிணையற்று விளங்கியவர். தமிழ் எழுத்துக்களைக் கொண்டு உலகிலுள்ள எல்லா மொழிச் சொற்களையும் எழுத முடியுமென்று காட்டியவர்.
அறிவியல் கலைச்சொற்களுக்குத் தனித் தமிழ்ச் சொற்கள் அமைத்தவர். தமிழ் வேர்ச்சொற்களில் இருந்து பல அறிவியல் சொற்களை ஆக்கி பயன்படுத்தியவர்.