சத்தியேந்திர நாத் போஸ்
இந்திய இயற்பியலாளர் சத்தியேந்திர நாத் போஸ் 1894ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார். இவர் இரசாயனம், புவியியல், விலங்கியல், மனித விஞ்ஞானம், உயிரின ரசாயனம், பொறியியல் ஆகிய துறைகளில் வல்லமை பெற்றவர்.

இவர் 1924ஆம் ஆண்டு மாக்ஸ் பிளாங்கின் விதி பற்றியும் ஆய்வு செய்து கட்டுரை எழுதி ஐன்ஸ்டீனுக்கு அனுப்பி வைத்தார். அந்த கட்டுரைக்கு மேலும் விரிவாக விளக்கம் அளித்து அவரே ஜெர்மன் இயற்பியல் அமைப்பிற்கு அனுப்பி வைத்தார்.
போஸான் என்னும் புதிய அடிப்படைத் துகள் பிரிவை கண்டுபிடித்தார். மேலும் இவருடைய ஆய்விலிருந்து போஸ்-ஐன்ஸ்டைன் செறிபொருள், போஸ்-ஐன்ஸ்டைன் புள்ளியியல் போன்ற கோட்பாடுகளையும் வெளியிட்டார்.
1954ஆம் ஆண்டு இயற்பியல் விஞ்ஞானத்தில் இவர் ஆற்றிய பணிக்காக பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. மேலும் ஏராளமான பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. விஞ்ஞான உலகில் பேரும் புகழும் பெற்ற இவர் தன்னுடைய 80வது வயதில் (1974) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1913ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி நவீன குடியுரிமை இயக்கத்தின் தாய் என போற்றப்பட்ட ரோசா பார்க்ஸ் பிறந்தார்.