Once in a class, students were asked to write about their aims. A student named Karan was the son of a horse trainer. He wrotes seven-page about his aim to be an owner of the horse ranch. Two days later he received his essay back with a low score.
After the class, he asked his teacher why he received such a low score. The teacher told him, ′This dream is unrealistic for a boy like you, who has no money′. Then the teacher offered him the opportunity to rewrite the essay. Karan went to home and asked his father how he should respond. His father told him, ′This is a very important decision, so you must come to your own conclusion′.
After two days, Karan brought the same essay to his teacher. No changes were made. He told his teacher, ′Keep the essay and I will keep my dream′.
After few years, Karan owned 200-acre horse ranch and a 4000 square foot house in the middle of the ranch. He framed the essay and he wrote ′Always remember to follow your heart and never listen to those who don′t believe in your ability to achieve your dreams′.
ஒருமுறை வகுப்பில் மாணவர்கள் தங்களுடைய இலக்குகளைப் பற்றி எழுதுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். அதில் கரண் என்ற மாணவன் ஒரு குதிரை பயிற்சியாளரின் மகன் ஆவார். குதிரை கால்நடைப் பண்ணையின் உரிமையாளராக இருக்க வேண்டும் என்ற அவனுடைய இலக்கை பற்றி அவன் ஏறத்தாழ ஏழு பக்கங்கள் எழுதினான். இரண்டு நாட்களுக்குப் பிறகு குறைந்த மதிப்பெண்ணுடன் தான் எழுதிய கட்டுரையை திரும்ப பெற்றுக் கொண்டான்.
இரண்டு நாட்களுக்கு பிறகு, ஆசிரியரிடம் ஏன் தான் குறைவான மதிப்பெண் பெற்றதாக கேட்டான். ஆசிரியர் அதற்கு 'பணம் இல்லாத உன்னை போன்ற ஒரு பையனுக்கு இந்த கனவு நடைமுறைக்குப் புறம்பானது" என்று பதிலளித்தார். பின்னர் ஆசிரியர் அந்த கட்டுரையை மாற்றியமைக்க அவனுக்கு ஓர் வாய்ப்பளித்தார். கரண் வீட்டிற்கு சென்று அவனுடைய அப்பாவிடம் அதற்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என்று கேட்டான். அவனுடைய தந்தை அவனிடம், 'இது மிகவும் முக்கியமான முடிவு, எனவே நீ உன்னுடைய சொந்த முடிவுக்கு வர வேண்டும்" என்றார்.
இரண்டு நாட்களுக்கு பிறகு, கரண் ஆசிரியரிடம் அதே கட்டுரையை கொண்டு வந்து கொடுத்தான். அதில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. அவன் தனது ஆசிரியரிடம், 'நீங்கள் கட்டுரையை வைத்துக் கொள்ளுங்கள், நான் என்னுடைய கனவை வைத்துக் கொள்கிறேன்" என்றான்.
சில வருடங்களுக்குப் பிறகு, கரண் 200 ஏக்கர் குதிரை கால்நடைப் பண்ணையையும், நடுவே 4000 சதுர அடி அளவில் வீட்டை சொந்தமாக வாங்கினான். அவன் தான் எழுதிய கட்டுரையை சட்டகமிட்டு அதில் 'எப்போதும் உங்கள் இதயத்தைப் பின்பற்றுவதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், மேலும் உங்கள் கனவை அடைய உங்களுக்குள் இருக்கும் திறமையை நம்பாதவர்களின் பேச்சை கேட்காதீர்கள்" என்று எழுதினான்.