மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Sunday, 3 February 2019

கடலை கடக்கும் எண்ணப்பறவை- BARN SWALLOW


அதிசயப் பறவையின் பெயர்:
       Barn Swallow – பார்ன் ஸ்வாலோ, Binomial Name:Hirundo rustica.

    ஒவ்வொரு முறை தன் இனப்பெருக்கத்திற்காக இந்த பறவை அர்ஜெண்டினாவில் இருந்து கலிபோர்னியா நாட்டிற்கு கடலின் வழியாக சுமார் 9300 கி.மீ. ( 5800 mi) முதல் 11,660 கி.மீ. ( 7250 mi) தூரம் பறந்து செல்லக் கூடிய திறமை வாய்ந்த பறவை.

    தான் பறந்து கொண்டிருக்கும் போதே தனது 70% உணவை ( பறந்து கொண்டிருக்கும் பூச்சிகளை ) உண்டு முடிக்கும் ஆற்றல் கொண்டது. நீர் நிலைகளுக்கு அருகே பறந்து சென்று கொண்டிருக்கும்போதே அதே வேகத்தில் கீழ்நோக்கிப் பறந்து சற்றும் வேகம் குறையாமல் தனக்குத் தேவையான நீரைப் பருகக் கூடிய ஆற்றல் கொண்டவை. உடலை நனைத்து குளிக்கவும் அதே முறையையே பின்பற்றுகின்றன.

    பறந்து செல்லும்போது, தன் சிறிய அலகினால், ஒரு சிறு குச்சியை தூக்கி செல்கிறது. எப்போது தனக்கு பசிக்கவும், ஓய்வும் தேவைப்படும் என பறவை நம்புகிறதோ அப்போது அந்த அதிசய “பார்ன் ஸ்வாலலோ” கடலின் மேற்பரப்பில் தான் சுமந்து வந்த அந்த சிறு குச்சியை தாழப்பறந்து, கடற்பரப்பில் தூக்கி வீசி, அதன் மீது அமர்ந்து கொண்டு ஓய்வும், துள்ளி குதிக்கும் மீன்களை வேட்டை ஆடும்.

Pages