மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Friday, 1 February 2019

இதற்கு கைமாறாக என்ன கிடைக்கும்?

A Slave and a Lion..!
Image result for A Slave and a Lion..!
        A slave was ill-treated by his master and he runs away to the forest. There he saw a lion, suffering in pain because of a thorn in his paw. The slave bravely goes forward and removes the thorn gently.


        The lion without hurting him goes away. Some days later, the slave′s master came to the forest for hunting and he catches many animals and cages them. The slave is spotted by one of the master′s servitor and he catched him and brought him to the cruel master.

       The master orders his servitor to throw the slave into the lion′s cage. When the slave is awaiting his death in the cage and he realizes that it is the same lion that he had helped. The lion also realised the slave, and it doesn′t hurt him. The slave rescued the lion and all other caged animals.

Moral : One should help others in need, we get the rewards of our helpful acts in return.

       அடிமை ஒருவரை அவனது எஜமான் மிகவும் மோசமாக வழி நடத்தி வந்தான், அதனால் அவன் காட்டிற்கு ஓடி விட்டான். அங்கே ஒரு சிங்கம், உள்ளங்கையில் முள் செடி ஒன்று குத்தி வலியால் துடித்து கொண்டிருப்பதை கவனித்த அவன், தைரியமாக முன்னோக்கி சென்று மெதுவாக உள்ளங்கையில் குத்தியிருந்த முள் செடியை நீக்கினான்.

          சிங்கம் அடிமையை துன்புறுத்தாமல் அங்கிருந்து சென்று விட்டது. சில நாட்கள் கழித்து, அந்த அடிமையின் எஜமான் வேட்டையாடுவதற்காக காட்டிற்கு வந்தான், பல விலங்குகளைப் பிடித்து கூண்டுகளில் அடைத்தான். எஜமானின் பணியாள் ஒருவனின் கண்ணிற்கு அந்த அடிமை தென்பட்டு விட்டான், உடனே அவனை பிடித்து தன்னுடைய எஜமானிடம் ஒப்படைத்தான். 

      எஜமான் தன்னுடைய பணியாளரிடம் அடிமையை சிங்கத்தின் கூண்டுக்குள் தூக்கி எறிய உத்தரவிட்டான். அடிமை கூண்டிற்குள் தன் சாவை நோக்கி எதிர் கொண்டிருக்கும் போது, அவன் உதவிய சிங்கம் உள்ளிருப்பதை உணர்ந்தான். சிங்கமும் அந்த அடிமை யார் என்று தெரிந்துக் கொண்டது, அதனால் அவனை காயப்படுத்தவும் இல்லை. அடிமை அந்த சிங்கத்தையும் மற்ற விலங்குகளையும் காப்பாற்றினான். 

நீதி : ஒருவருக்கு உதவி தேவைப்படும் போது அவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும். அதற்குக் கைமாறாக நமக்கும் வெகுமதிகள் கிடைக்கும்.

Pages