ஒட்டகத்தின் அறிவியல் பெயர் ′Camelus′ ஆகும்.
ஒட்டகத்தின் கண் இமைகளின் முடி, மணலில் இருந்து அதன் கண்களைப் பாதுகாக்க உதவுகின்றது.
ஒட்டகங்களுக்கு தடிமனான உதடுகள் உள்ளன அதனால் அவை முட்களுள்ள தவரங்களை சாப்பிடுகின்றன.
′Camel′ என்ற வார்த்தை அரபு மொழியில் இருந்து வந்தது.
ஒற்றை திமில் உடைய ஒட்டகம் ′அரேபிய ஒட்டகம்′ என்று அழைக்கப்படுகிறது.
ஒற்றை திமில் உடைய ஒட்டகத்தின் ஆயுட்காலம் 40 ஆண்டுகள் ஆகும்.
பாக்டிரியன் ஒட்டகங்கள் இரண்டு திமில்களை கொண்டிருக்கும்.
பொதுவாக ஒட்டகம் மூன்று நிமிடங்களில் 200 லிட்டர் தண்ணீரை குடிக்கும்.
ஒட்டகத்தின் முடி அதை அதிக வெப்பநிலையில் இருந்து குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.