மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Wednesday, 13 February 2019

நீங்கள் யார்???


The Cunning Bats..!

        Many years ago, the jungle did not have any King. The animals said ′The lion must be the King of this jungle.′ While the birds said, ′The Hawk must be the King′. But the final decision was not taken. 

       The bats were cunning. They approached to the animal and said, ′Since we too are animal, we would like a lion to be the King′. So the animals thought that the bats were on their side. 


       The bats then went to the birds and said, ′we are birds, Hawk must be the King of this forest′. And the birds thought that the bats were on their side. 

      After a few days, the birds came to know that the cunning bats were not honest. They informed the animals about this. ′The bats think they are clever, let us teach them a good lesson,′ said the animals. 

      So, the next day, the birds and the animals made peace with each other. The lion was selected as the King. The newly crowned King addressed to the bats, ′You must choose the group to which you belong′. The bats thought ′We must join to the animals because the lion is the King′. Finally the bats announced ′We are animals′. The animals says, ′But you have wings, no animals have wings. So you must join to the birds′. Likewise the birds says, ′Bats have babies. Bats don′t lay eggs, so they cannot be birds′. 

     The bats just stood there, not knowing what to do. 

       பல ஆண்டுகளுக்கு முன்பு, காட்டிற்கு ராஜா இல்லை. விலங்குகள் 'சிங்கம் தான் இந்த காட்டிற்கு ராஜாவாக இருக்க வேண்டும்" என்று கூறின. அப்போது பறவைகள், 'பருந்து தான் ராஜாவாக இருக்க வேண்டும்" என்றன. ஆனாலும் இறுதி முடிவை எடுக்க முடிய வில்லை. 

     வெளவால்கள் தந்திரமானவை. அவை மிருகங்களை அணுகி, 'நாங்கள் மிருகங்களாக இருப்பதால், அரசனாக சிங்கம் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்றன. இதைக் கேட்ட மற்ற விலங்குகள் வெளவால் அவர்களின் பக்கம் தான் என்று நினைத்தன. 

    அதற்கு பிறகு வெளவால் பறவைகளிடம் சென்று 'நாம் பறவைகள் என்பதால், பருந்து இந்த காட்டிற்கு அரசனாக இருக்க வேண்டும்" என்றன. இதைக் கேட்ட பறவைகள் வெளவால் அவர்களின் பக்கம் இருக்கிறது என்று நினைத்தன. 

     சில நாட்களுக்குப் பிறகு வெளவால்கள் நேர்மையாக இல்லை என்று பறவைகள் அறிந்தன. பறவைகள் இதை விலங்குகளுக்கு தெரிவித்த போது 'வெளவால்கள் புத்திசாலி என்று நினைக்கின்றன, எனவே நாம் அவைகளுக்கு ஒரு நல்ல பாடத்தை கற்பிக்க வேண்டும்," என்று விலங்குகள் கூறின.

    எனவே, அடுத்த நாள், பறவைகள் மற்றும் விலங்குகள் ஒருவருக்கொருவர் சமாதானத்தை ஏற்படுத்திக் கொண்டன. சிங்கம் ராஜாவாக தேர்வு செய்யப்பட்டது. புதிதாக முடிசூட்டப்பட்ட ராஜா, 'நீங்கள் எந்த குழுவை சேர்ந்தவர்கள் என்று தேர்வு செய்ய வேண்டும்" என்று உரத்த குரலில் வெளவால்களிடம் கூறியது. 'சிங்கம் ராஜாவாக இருப்பதால் நாம் விலங்குகளில் சேர்ந்துக் கொள்ளலாம்" என்று வெளவால் நினைத்து, நாங்கள் விலங்குகள் என்று அறிவித்தன. உடனே மற்ற விலங்குகள் எல்லாம் 'ஆனால் உங்களுக்கு இறக்கைகள் உள்ளன. இங்கு எந்த விலங்குகளுக்கும் இறக்கைகள் இல்லை. நீங்கள் பறவை இனங்களில் சேர வேண்டும்" என்றன. உடனே பறவைகள் 'வெளவால்களுக்கு குட்டிகள் இருக்கின்றன. அவைகள் முட்டைகளை இடுவதில்லை. பறவைகள் முட்டையிடும் எனவே நீங்கள் பறவைகள் அல்ல," என்று கூறின.

    வெளவால்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல், அங்கேயே நின்றன.

Pages