The Curse of The Bullock..!
Long time ago, in a small village, there lived an old woman with her daughter. While the old woman was hard working, her daughter was too lazy and selfish. They had a bullock. The old woman said, ′We should take proper care of our bullock′. The daughter replied that, ′Animals should serve us, we should not serve them′.
There was a pond, at some distance from the old woman′s house. Every afternoon, she used to take the bullock to the pond to have a bath and to drink water.
One day, the old woman fell ill. She requested her daughter, ′It is very hot today, the bullock must be thirsty, Look! I have some sweets here. I know you love sweets, dear. Take the bullock to the pond. While drinking water, you can eat these sweets,′. The girl too agreed.
But she was out of her mother′s sight, the lazy girl tied the bullock to a tree and sat down to eat the sweets. The thirsty bullock also waited. But after having eaten all the sweets, the daughter returned home and lied to her mother that she had taken the bullock to the pond and that the bullock drank water from the pond.
The bullock was extremely angry. It cursed the daughter, ′In your next birth, you will be born as a Jacobin cuckoo, a bird that drinks water when only it rains. As you kept me thirsty today, so will you remain thirsty.′ The Curse of the Bullock came true. In her next birth, the daughter was born as a Jacobin cuckoo.
Moral : We should be kind to animals.
நீண்ட காலத்திற்கு முன்பு, ஒரு சிறிய கிராமத்தில் தன் மகளுடன் ஒரு வயதான பெண்மணி ஒருவர் வாழ்ந்து வந்தார். வயதான பெண்மணி கடினமான உழைப்பாளி, அவளுடைய மகள் மிகவும் சோம்பேறித்தனமாகவும் சுயநலமாகவும் இருந்தாள். அவர்களிடம் ஒரு காளை இருந்தது. 'நம்முடைய காளையை நாம் சரியாக கவனிக்க வேண்டும்" என்று வயதான பெண் கூற, அதற்கு அவளுடைய மகள், 'மிருகங்கள் நமக்கு சேவை செய்ய வேண்டும், நாம் அவைகளுக்கு சேவை செய்யக் கூடாது" என்று பதிலளித்தாள்.
அந்த வயதான பெண்மணியின் வீட்டிலிருந்து சற்று தூரத்தில் ஒரு குளம் உள்ளது. ஒவ்வொரு பிற்பகலிலும், காளையை குளிப்பாட்டவும் தண்ணீர் குடிக்க வைக்கவும் குளத்திற்கு அழைத்துச் செல்வாள்.
ஒரு நாள், வயதான பெண் நோய்வாய்ப்பட்டிருந்ததால், அவள் தன் மகளிடம் 'இன்று மிகவும் சூடாக இருக்கிறது, காளை தாகமாக இருக்கும், இதோ, சில இனிப்புகள் என்னிடம் உள்ளது, உனக்கு இனிப்பு ரொம்ப பிடிக்கும் என்று எனக்கு தெரியும். காளையை குளத்திற்கு அழைத்துச் செல், அது தண்ணீர் குடிக்கும்போது, நீ இனிப்புகளை சாப்பிடு" என்று கூறினாள். மகளும் அதற்கு ஒப்புக் கொண்டாள்.
ஆனால் அந்த சோம்பேறி பெண் தாயின் பார்வையிலிருந்து மறைந்தவுடன், ஒரு மரத்தில் காளையை கட்டிவிட்டு, இனிப்புகளை சாப்பிட உட்கார்ந்தாள். தாகத்துடன் இருந்த காளையும் காத்திருந்தது. ஆனால் அனைத்து இனிப்புகளையும் சாப்பிட்ட பிறகு, மகள் வீட்டிற்குத் திரும்பி, தன் தாயிடம், காளையை குளத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், குளத்திலிருந்த தண்ணீரை காளை குடித்ததாகவும் பொய் கூறினாள்.
காளை மிகவும் கோபமடைந்து, அந்தப் பெண்ணை, 'உன்னுடைய அடுத்த பிறப்பில், நீ மழை பெய்யும் போது மட்டும் தண்ணீர் குடிக்கும் சுடலைக் குயிலாக பிறப்பாய். இன்று நீ என்னை தாகமாய் வைத்திருந்தாய், அதனால் நீயும் தொடர்ந்து தாகமாயிருப்பாய்." என்று சபித்தது. காளையின் சாபம் உண்மையானது. அடுத்த பிறவியில், அந்தப் பெண் சுடலைக் குயிலாக பிறந்தாள்.
நீதி : மிருகங்கள் மீது நாம் அன்பாக இருக்க வேண்டும்.