ஒரு முறை ராஜா சாலையில் ஒரு பெரிய பாறாங்கல்லை வைத்து, யாராவது அந்த பாறாங்கல்லை அந்த வழியில் இருந்து அகற்றுகிறார்களா என்று மறைந்து பார்த்து கொண்டிருந்தார். நாட்டில் உள்ள சில செல்வந்த வியாபாரிகளும், அரசவையினரும் அந்த வழியாக சென்றனர், ஆனால் யாரும் அதை கண்டுக் கொள்ளவில்லை.
சாலைகளை நன்கு பராமரிக்கவில்லை என்று பலர் உரத்த குரலில் ராஜாவை குற்றம் சாட்டினர், ஆனால் அவர்களுள் யாரும் அந்த பாறாங்கல்லை நகர்த்தவில்லை.
காய்கறிகளை சுமந்து கொண்டு விவசாயி ஒருவர் அந்த வழியாக வந்தார். சாலையில் பாறாங்கல் இருப்பதைக் கண்டு, தனது சுமையை கீழே இறக்கி வைத்து, சாலையிலிருந்து பாறாங்கல்லை நகர்த்த முயன்றார், இறுதியாக அவர் வெற்றியும் பெற்றார்.
விவசாயி பிறகு தன்னுடைய காய்கறிகளை எடுக்கச் சென்ற போது, பாறாங்கல் இருந்த இடத்தில் பணப்பை ஒன்று இருப்பதை கவனித்தார். அவர் பணப்பையை திறந்த பார்த்த போது, அதில் பல தங்க நாணயங்களும், ராஜா எழுதிய ஒரு குறிப்பும் இருந்தது. அதில், சாலையில் இருந்து பாறாங்கல்லை அகற்றிய நபருக்கு தான் இந்த பொற்காசுகள் என்று குறிப்பிட்டிருந்தது.