மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Wednesday, 20 February 2019

விவேகானந்தரின் பொன்மொழிகள்..!!


இளைஞர்களே, உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால், என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால், ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்கு காத்திருக்கிறது என்பேன்.

பிறரது பாராட்டுக்கும், பழிக்கும் செவி சாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.
இந்தியாவை முன்னேற்றமடையச் செய்ய விரும்பினால், பாமர மக்களுக்காக நாம் வேலை செய்தாக வேண்டும்.
நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்கு காரணம்.
எவனுடைய இதயம் ஏழைகளுக்காக ரத்தம் வடிக்கிறதோ, அவனையே நான் மகாத்மா என்பேன.
எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.
கீழ்த்தரமான தந்திரங்களினால் இந்த உலகில் மகத்தான காரியம் எதையும் சாதித்துவிட முடியாது. இது என் உறுதியான நம்பிக்கை.
சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.
இயற்கையை வெல்வதற்காகவே நாம் பிறந்திருக்கின்றோம். அதற்குப் பணிந்து போவதற்கு அல்ல.
இந்த உலகம் பெரிய பயிற்சிக்கூடம். நம்மை வலிமைப்படுத்திக் கொள்வதற்காகவே இங்கு வந்திருக்கிறோம்.
கோவிலில் உள்ள விக்ரகத்தைக் கடவுள் என்று கூறலாம். ஆனால் கடவுளையே விக்ரகம் என்று நினைக்கக்கூடாது.
ஒளியும் இருளும் ஒரே இடத்தில் இருக்க முடியாது. அதுபோல சுயநலமும், தெய்வத்தன்மையும் இணைந்திருக்க முடியாது.
பிரபஞ்சம் என்னும் மகத்தான புத்தகம் நம் முன்னே விரிந்து கிடக்கிறது. அதைப் படித்து அறிவை விசாலப்படுத்துங்கள்.

Pages