ஒரு கிராமத்தில் ஒரு வயதான பெண்மணி ஒருவள் வாழ்ந்து வந்தாள். அவளிடம் இரண்டு கழுதைகள் இருந்தன. கழுதைகளும் வயதான பெண்மணிக்கு உதவி வந்தன. ஒவ்வொரு காலையிலும் அவள் கழுதைகளை வயலுக்கு அழைத்துச் செல்வாள்.
ஒரு நாள், இரண்டு இளைஞர்கள் அந்த வயதான பெண்மணி கழுதையுடன் இருப்பதைக் கண்டு, 'காலை வணக்கம், கழுதைகளின் தாயே!" என்று கத்தினார்கள். உடனே அந்த வயதான பெண்மணி 'காலை வணக்கம், என் மகன்களே" என்று பதிலளித்து விட்டு அவர்களை பார்த்து சிரித்தார்.
அந்த இரண்டு இளைஞர்களால் எதுவும் பேச முடியவில்லை. அவர்கள் அமைதியாக அந்த இடத்தை விட்டு வெளியேறினர்.
நீதி : மற்றவர்களை கிண்டல் செய்யாதே.