மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Thursday, 14 February 2019

ஏன் இந்த பொருள் விலைமதிப்பில்லாதது. (தேசதந்தை)

The Value of Copper Coin..!


      Once, Gandhi was on an expedition to collect funds from various cities and villages for an organization to help the poor. He went to several places and finally reached Orissa. He organized a meeting in Orissa.

      There, he requested the people to give him funds for the organization. At the end of his speech, a very old woman with bent back, tattered clothing got up. She requested the volunteers to allow her to reach Gandhi. However, the volunteers stopped her. She did not give up. She fought with them and reached Gandhi.

      She touched the feet of Gandhi. Then she took out a copper coin kept in the folds of her saree and placed it at his feet. Then the old lady left the stage.

      Gandhi very carefully took the coin. The treasurer of the organization asked Gandhi for the copper coin, but he refused to give it.

     I keep cheques worth thousands of rupees, said the treasurer. ′Yet you won′t trust me?′ Gandhi said, ′This copper coin is worth much than thousands. If a man has several lakhs and he gives away a thousand or two thousand, it doesn′t matter′.

      The old lady did not even have proper clothes and could not afford good food. Still, she gave everything she had. That is why Gandhi regarded the coin as very precious.

Moral : Offering help when we have nothing makes it more valuable.

       ஒருமுறை, காந்தி ஏழைகளுக்கு உதவி செய்வதற்காக பல்வேறு நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் சென்று நிதியுதவியை சேகரித்தார். அவர் பல இடங்களுக்குச் சென்று, இறுதியாக ஒரிசாவை அடைந்தார். அங்கு ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தார்.

     அங்கே, பொதுமக்களிடம் அந்த நிறுவனத்திற்கு நிதியுதவி வழங்கும்படி கேட்டுக் கொண்டார். அவரது உரையின் முடிவில், வளைவான முதுகுடன், கந்தலான ஆடை அணிந்திருந்த ஒரு வயதான பெண்மணி எழுந்தாள். தன்னை காந்தியிடம் செல்ல அனுமதிக்கும் படி தொண்டர்களை கேட்டுக் கொண்டார். எனினும், தொண்டர்கள் அவளை நிறுத்திவிட்டார்கள். ஆனாலும் அவள் கைவிடவில்லை. அவர் அவர்களுடன் சண்டையிட்டு காந்தியை அடைந்தார். 

      காந்தியின் பாதத்தை தொட்டு. பின்னர் அவள் தன் சேலையின் மடிப்பில் வைத்திருந்த செம்பு நாணயத்தை எடுத்து காந்தியின் காலடியில் வைத்தார். பின்னர் வயதான பெண்மணி மேடையை விட்டு கீழே இறங்கினார். 

      காந்தி மிகவும் கவனமாக அந்த நாணயத்தை எடுத்துக் கொண்டார். அந்த அமைப்பின் பொருளாளர் செம்பு நாணயத்தை காந்தியிடம் கேட்ட போது, அவர் அதைக் கொடுக்க மறுத்துவிட்டார்.

     அதற்கு அந்நிறுவனத்தின் பொருளாளர் 'ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காசோலைகளை நான் வைத்திருக்கிறேன்", 'ஆனாலும் என்னை நீங்கள் நம்பமாட்டீர்களா?" என்று கேட்க, காந்தி, 'இந்த செம்பு நாணயம் அந்த ஆயிரங்களைவிட விலை மதிப்பானவை. ஒரு மனிதனிடம் பல லட்சம் இருந்து அவர் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் கொடுத்தால், அது ஒரு விஷயமே இல்லை' என்றார்.

     அந்த வயதான பெண்மணியிடம் சரியான ஆடைகள் கூட இல்லை, நல்ல உணவை கூட வாங்க முடியாது. ஆனால் அந்த பெண்மணி தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் கொடுத்து விட்டாள். அதனால்தான் காந்தி அந்த நாணயத்தை மிகவும் விலையுயர்ந்ததாக கருதினார்.

நீதி : நம்மிடம் ஒன்றும் இல்லாதபோது உதவுவது மிகவும் மதிப்பானது.

Pages