A House in The Sky..!
There lived a clever man named Abilash in a village. By knowing this, the chief invited Abilash and ordered him to construct a house in the sky within three days.
Abilash accepted his order and began to think. Then he took a kite and tied a bell and a long string to it and he tied the string to a tree. The next day all the people of the town heard the bell and saw a dark spot in the sky.
The chief also saw the spot. Abilash came to the chief and said, The house in the sky will soon be ready. Do you hear the bell? The workers are ringing the bell from the sky. They need some boards for the roof of the house. Please tell your soldiers to climb up to the sky with the boards. The chief asked, ′But how will my soldiers climb up to the sky?′. Abilash said ′There is a way up′.
So the chief ordered his soldiers to get some boards and to follow Abilash. They came to the tree and saw the string there. ′This is the way to the sky,′ Abilash said. The soldiers tried to climb up the string, but they can′t. Then the soldiers went to the chief and said, ′No one can climb up to the sky!′.
The chief thought for sometime and said, ′That′s right. Nobody can do that′. Then Abilash said to the chief, ′If you know that, why do you ask me to build a house in the sky?′. The chief couldn′t answer to that. Abilash went to the tree, cut the string and took away the kite.
ஒரு கிராமத்தில் அபிலாஸ் என்ற புத்திசாலி மனிதன் ஒருவன் வாழ்ந்து வாழ்ந்தான். இதை அறிந்த தலைமை நிர்வாகி, அபிலாஸை அழைத்து மூன்று நாட்களுக்குள் வானத்தில் ஒரு வீட்டைக் கட்டும்படி உத்தரவிட்டார்.
அபிலாஸ் அவருடைய உத்தரவை ஏற்றுக்கொண்டு சிந்திக்கத் தொடங்கினார். பின்னர் அவர் ஒரு காத்தாடியை எடுத்து, அதில் ஒரு மணியையும் நீண்ட தூரத்திற்கான சரத்தையும் கட்டி, அதை ஒரு மரத்தில் கட்டி விட்டார். அடுத்த நாள், நகரத்தில் உள்ள எல்லா மக்களும் மணியின் சத்தத்தை கேட்டார்கள், மற்றும் வானத்தில் ஒரு இருண்ட புள்ளி இருப்பதையும் கண்டார்கள்.
தலைமை நிர்வாகியும் அந்த புள்ளியை பார்த்தார். அபிலாஸ் தலைமை நிர்வாகியிடம் வந்து, வானத்திலிருக்கும் வீடு சீக்கிரமாக தயாராகிவிடும். உங்களுக்கு மணியின் சத்தம் கேட்கிறதா? வேலையாட்கள் வானத்திலிருந்து மணி அடிக்கிறார்கள். அவர்களுக்கு வீட்டின் கூரையை கட்ட சில பலகைகள் தேவைப்படுகிறது. பலகைகளுடன் உங்கள் வீரர்களை வானத்தில் ஏற சொல்லுங்கள் என்றார். இதை கேட்ட தலைமை நிர்வாகி 'எப்படி என்னுடைய வீரர்கள் மேலே ஏறுவார்கள்?" என கேட்க, 'அங்கே ஒரு வழி இருக்கிறது," என்றார் அபிலாஸ்.
எனவே, சில வீரர்களை பலகைகளை எடுத்துக் கொண்டு அபிலாசைப் பின்தொடரும் படி தலைமை அதிகாரி உத்தரவிட்டார். அவர்கள் மரத்தை அடைந்ததும் அங்கே சரத்தை கண்டார்கள். 'இது தான் வானத்திற்கான வழி," என்று அபிலாஸ் கூறினார். வீரர்கள் சரத்தில் ஏற முயன்றனர், ஆனால் அவர்களால் முடியவில்லை. வீரர்கள் தலைமை நிர்வாகியிடம் சென்று 'எவராலும் வானத்தில் ஏற முடியாது என்றார்கள்."
தலைமை நிர்வாகி சிறிது நேரம் யோசித்து விட்டு, 'அது சரி, யாராலும் இதை செய்ய முடியாது" என்றார். பின் அபிலாஸ் தலைமை நிர்வாகியிடம், 'உங்களுக்கு அது தெரிந்தால், நீங்கள் ஏன் என்னிடம் வானத்தில் ஒரு வீட்டைக் கட்ட கூறினீர்கள்?" என்று கேட்டார். அதற்கு தலைமை நிர்வாகியால் பதிலளிக்க முடியவில்லை. பிறகு அபிலாஸ் மரத்திற்குச் சென்று, அந்த சரத்தை வெட்டி, பட்டத்தை எடுத்துக் கொண்டு சென்றார்.