ஆபிரகாம் லிங்கனுக்கு இளைஞர் ஒருவர் கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் தாம் சட்டப் படிப்பு பயில உள்ளதாகவும் அது குறித்து லிங்கனின் அறிவுரைகளை வழங்குமாறும் கேட்டுக்கொண்டு இருந்தார்.
லிங்கன் அதற்கு தகுந்த பதில் தந்து கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், 'சட்டத்துறையை நீங்கள் தேர்ந்தெடுத்துவிட்டீர்கள். அதுவே தங்கள் சிந்தனையில் பாதி நிறைவேறியதற்கு ஒப்பானது தான். மேலும் அதை வெற்றிகரமாக்கக் கூடியது உங்கள் திடமான நம்பிக்கை மட்டுமே. மற்ற யாருமோ அல்லது வேறு எதுவுமோ அதற்கு அவசியம் இல்லை" என்று குறிப்பிட்டிருந்தார் லிங்கன்.