ஜார்ஜ் வாஷிங்டன் 1732-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ந்தேதி பிறந்தார். இவர் அமெரிக்கக் கண்டத்தின் படையைத் தலைமை தாங்கி, பிரித்தானியரை அமெரிக்கப் புரட்சிப் போர் என்னும் அமெரிக்க விடுதலைப் போரில் (1775-1783) தோற்கடித்தார்.
இவர் ஐக்கிய அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் எட்டு ஆண்டுகள்- 1789 முதல் 1797 வரை, ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகத் தலைமை தாங்கினார்.
விடுதலை பெற்ற நாடாக ஐக்கிய அமெரிக்கா திகழ்ந்த துவக்க ஆண்டுகளில் இவர் ஆற்றிய நாடு நிறுவும் பணிகளை நோக்கி இவரை ஐக்கிய அமெரிக்காவின் தந்தை எனப் போற்றுவர்.