மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Thursday, 28 February 2019

அரண்மனையில் ஒரு போட்டி!


       விஷ பாம்புகள் நிறைந்த ஒரு குளத்தை நீந்தி கடந்து சாதனை புரிபவருக்கு 1000 வராகன் பொன் அல்லது 10 கிராமங்கள் அல்லது தன் ஒரே மகளான இளவரசியை திருமணம் செய்வது, இந்த மூன்றில் ஒரு பரிசை போட்டியாளர் தேர்ந்தெடுக்கலாம். 

        உயிர் பிழைப்பது சிரமம் என்பதால் போட்டி அறிவித்து வெகுநேரம் ஆகியும் யாரும் போட்டிக்கு வரவே இல்லை.

       திடீரென்று ஒரு இளைஞன் குளத்தில் குதித்ததும் மன்னருக்கு குஷி. உயிரையும் துச்சமாக மதித்து ஒரு சாதனையாளன் போட்டிக்கு தயாராகி விட்டானே? என்று...

          ஒரு வழியாக இளைஞன் நீந்தி பத்திரமாக கரையேறிவிட்டான். 

         அவனை கட்டி அணைத்து, பாராட்டுகளை தெரிவித்து, 'உனக்கு என்ன பரிசு வேண்டும் கேள்! ஆயிரம் வராகன் பொன்னா?" 

'இல்லை..." 

'10 கிராமங்களா?" 

'வேண்டாம்..." 

   'ஆஹா! அப்படி என்றால் இளவரசியை திருமணம் செய்து கொள்கிறாயா?"

'தேவை இல்லை..." 

       'இது மூன்றில் ஒன்றை தானே பரிசாக அறிவித்து இருந்தேன். மூன்றுமே வேண்டாம் என்று சொல்லிவிட்டாயே? ஆனாலும் உன்னை வெறும் கையுடன் அனுப்ப எனக்கு மனம் வரவில்லை. உனக்கு என்ன வேண்டுமோ அதைக் கேள், கட்டாயம் அதை தருகிறேன்..."

         'பின் அந்த இளைஞன் என்னை எவன் இந்த குளத்தில் தள்ளிவிட்டான் என்று தெரிய வேண்டும் என்று கூறினான்...!"

Pages