காட்டில் உள்ள ஒரு மா மரத்தில் நிறைய பறவைகள் வாழ்ந்து வந்தது. பறவைகள் சிறிய கூட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது. மழைக்காலம் துவங்குவதற்கு முன்பு, காட்டில் உள்ள அனைத்து விலங்குகளும் தங்கள் வீடுகளை சீரமைத்தன. பறவைகளும் அதனுடைய கூட்டை இன்னும் பாதுகாப்பாக பத்திரபடுத்தின.
மழைக்காலமும் வந்தது. எல்லா விலங்குகளும் பறவைகளும் தங்கள் வீடுகளில் தங்கின. பல நாட்கள் தொடர்ந்து மழை பெய்தது. ஒரு நாள், மழையில் நனைந்துக் கொண்டு குரங்கு ஒன்று காட்டிற்கு வந்தது. குளிரால் நடுங்கிக் கொண்டு மரத்தின் கிளையின் கீழ் உட்கார்ந்தது.
இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பறவைகள் குரங்கிற்கு உதவ முடிவெடுத்தன. அவைகளுள் ஒரு பறவை 'சகோதரனே! உங்களுக்கு தேவைப்பட்டால் நீங்கள் எங்கள் கூட்டில் தங்கிக் கொள்ளலாம்" என்றது. இதைக் கேட்ட குரங்கு 'நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீ எப்படிச் சொல்லலாம்?" என்று கேட்டு பறவையை பார்த்து உறுமியது. குரங்கு கோபத்துடன் பறவையின் கூட்டின் மீது பாய்ந்து, கூட்டை எடுத்து கிழித்து தரையில் வீசியது. இப்போது அந்த பறவைகளுக்கும் குஞ்சுகளுக்கும் உதவ யாரும் இல்லை.
அந்த பறவை பின்னர், 'முட்டாள்கள் அறிவுரைகளை மதிக்க மாட்டார்கள். அவர்களுக்கு ஆலோசனை செய்யாதிருப்பது நல்லது" என்று நினைத்தது.