ஒருமுறை சுவாமி விவேகானந்தர் இருக்கும் மடத்திற்கு வந்த ஒரு சீடர் அங்கே இருந்த களஞ்சியப் புத்தகங்களின் தொகுதியை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் விவேகானந்தரிடம் வியப்புடன் கூறினார்...
'இந்த புத்தகங்கள் எல்லாவற்றையும் ஒரு பிறவியில் படித்து முடிப்பது இயலாத காரியம்" என்றார். சுவாமி விவேகானந்தரோ அந்த புத்தகங்களில் பத்துப் பகுதிகளை முடித்துவிட்டுப் பதினோராம் பகுதியைப் படித்துக் கொண்டிருக்கிறார் என்பது சீடருக்கு தெரியாது.
சுவாமி விவேகானந்தரோ அந்த சீடரிடம் 'என்ன சொல்கிறாய் நீ? முதல் பத்துப் பகுதிகளில் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேள். நான் பதில் சொல்கிறேன்?" என்றார்.
சீடரோ திகைப்புடன் 'என்ன, இந்த நூல்களை எல்லாம் படித்து விட்டீர்களா?" என்றார்.
விவேகானந்தரோ 'படிக்காமல் கேள்வி கேட்கச் சொல்வேனா? என்றார்.
சீடர், சுவாமி விவேகானந்தர் சொல்வதால் அவரிடம் புத்தகத்தில் முதல் பத்துப் பகுதிகளிலிருந்து வெவ்வேறு விதமாக பல கேள்விகளை வெவ்வேறு பக்கங்களிலிருந்தும் கேட்டார்.
விவேகானந்தர் அசராமல் அனைத்திற்கும் பதிலும், விளக்கமும், சில இடங்களில் அந்த புத்தகத்தின் மொழியிலேயே அவற்றை எடுத்துக்கூறி அசர வைத்தார்.
சீடர் புத்தகத்தை வைத்துவிட்டு 'இது மனித ஆற்றலால் முடியாத காரியம்!" என்றார்.
ஆனால், விவேகானந்தர் 'ஏன் முடியாது. இதோ பார், பிரம்மச்சரியத்தை ஒழுங்காக கடைப்பிடிப்பது ஒன்றால் மட்டுமே எல்லா கலைகளும் கணநேரத்தில் கைவசப்படும்." என்றார்.