Henry and The Sea..!
Henry was a great king. He was also a great soldier. One day he went to the sea-shore. He sat on a chair. His friends stood behind him.
One of the friends said, ′King! You are the master of the world. Even the waves of the sea will obey your orders′.
The king said nothing in reply. He turned to the waves and said, ′This is my order to you. Don′t come near me. Go back! I am your master. Obey me!′.
But the waves came near. They flowed over the king′s feet. One of the friend said to the king, ′You were not great! God alone is great! He rules the world. The Sun, the Moon, the Stars and the Sea obey only his orders′.
Henry put aside his crown. He did not wear it from that day.
ஹென்றி ஒரு மிகப்பெரிய மன்னன். அவர் ஒரு பெரிய வீரரும் கூட. ஒரு நாள் அவர் கடற்கரைக்குச் சென்றார். அவர் ஒரு நாற்காலியில் அமர்ந்தார். அவரது நண்பர்கள் அவருக்கு பின்னால் நின்றனர்.
நண்பர்களுள் ஒருவர் ஹென்றியிடம், 'மன்னனே! நீங்கள் தான் உலகத்தின் தலைவன். கடலின் அலைகள் கூட உம்முடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும்" என்றான்.
இதைக் கேட்ட ராஜா பதில் எதுவும் சொல்லாமல், அலைகளை நோக்கி திரும்பி நின்று, 'இது என்னுடைய கட்டளை, என் அருகில் வர வேண்டாம். திரும்பிப் போ! நான் உங்கள் எஜமான். எனக்கு பணிந்து நடங்கள்!" என்றார்.
ஆனால் அலைகள் அருகில் வந்தன. ராஜாவின் காலடியில் ஓடின. பின்னர் அவர் நண்பர்களில் ஒருவர் ராஜாவிடம், 'நீங்கள் பெரியவர் அல்ல! கடவுள் மட்டுமே பெரியவர்! அவர் தான் இந்த உலகத்தை ஆளுகிறார். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் மற்றும் கடல் அவருடைய ஆணைக்கு கீழ்ப்படிகின்றன" என்றார்.
ஹென்றி அவருடைய கிரீடத்தை ஒதுக்கி வைத்தார். அவர் அந்த நாளில் இருந்து கிரீடத்தை அணிவதில்லை.