மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Thursday 28 February 2019

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

Birbal′s Wisdom..!!
      

      One fine day, Akbar lost his ring. When Birbal arrived in the court, Akbar told him ′I have lost my ring. My father had given to me as a gift. Please help me to find it′. Birbal said, ′Don′t worry, I will find your ring right now′.

     He said, ′Your ring is here with one of the perosn. The person who has a straw in his beard has your ring′. The person who had the emperors ring was shocked and immediately moved his hand over his beard. Birbal noticed this act of the person. He immediately pointed towards the person and said, ′Please search this man. He has the emperors ring′. The ring was with the same person as he said.

     Akbar could not understand how Birbal had Managed to find the ring. Birbal then told Akbar that a guilty person is always scared.

Moral: A Guilty Conscience need No Accuser.

       ஒரு நல்ல நாளன்று அக்பர் தன்னுடைய மோதிரத்தை தொலைத்து விட்டார். பீர்பால் நீதிமன்றத்திற்கு வந்தபோது, அக்பர் நான் என்னுடைய மோதிரத்தை தொலைத்து விட்டேன். அந்த மோதிரத்தை என் தந்தை எனக்கு பரிசாகக் கொடுத்தார். அதை எப்படியாவது கண்டுபிடிப்பதற்கு எனக்கு உதவுங்கள் என்றார். பீர்பால் உடனே, நீங்கள் கவலைப்பட வேண்டாம், நான் இப்போது உங்கள் மோதிரத்தை கண்டுபிடிக்கிறேன் என்றார்.

        பீர்பால் அக்பரிடம், உங்களுடைய மோதிரம் இங்குள்ள ஒரு நபரிடம் தான் உள்ளது. திருடியவரின் தாடியில் கண்டிப்பாக வைக்கோல் இருக்கும் என்று அவையில் கூற மோதிரத்தை திருடியவர் அதிர்ச்சியடைந்து தன்னுடைய தாடியை தொட்டுப் பார்த்தார். அந்த நபரின் நடவடிக்கையை பீர்பால் கவனித்தார், உடனே அந்த நபரை கைக்காட்டி இந்த நபரை சோதனை செய்யுங்கள், அவரிடம் தான் மோதிரம் இருக்கும் என கூறினார். அவர் கூறியபடியே அந்த நபரிடம் தான் மோதிரம் இருந்தது. 

       ஆனால் அக்பருக்கு பீர்பால் மோதிரத்தை எவ்வாறு கண்டுபிடித்தார் என்று புரியவில்லை, பிறகு பீர்பால் அக்பரிடம், குற்றவாளி எப்போதும் பயப்படுவார் என பதிலளித்தார்.

நீதி : குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.

Pages