* ‘புரோபயாடிக்ஸ்’ (Probiotics) என்னும் நன்மை செய்யும் பாக்டீரியா உள்ள தயிர் போன்ற உணவுகளைச் சாப்பிடலாம்.
* மலம், சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்தால், தாமதிக்காமல் உடனடியாக மலம் கழித்துவிட வேண்டும்.
* ‘குளூட்டன் ஃப்ரீ டயட்’ (Gluten free diet) உணவு முறையைப் பின்பற்றலாம். ‘குளூட்டன்’ என்னும் புரதம் இல்லாத உணவுகள் கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிச் சாப்பிடலாம்.
* மருத்துவரின் பரிந்துரையின்றி, சுயமாக மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
* நாளொன்றுக்கு மூன்று லிட்டர் நீர் அருந்த வேண்டும். முடிந்தவரை நீரை நன்றாகக் காய்ச்சி, வடிகட்டி அருந்துவது நல்லது.
* புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் செயற்கைக் குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
* எந்த உணவைச் சாப்பிட்டால் வாய்வு அதிகரிப்பதாகத் தோன்றுகிறதோ, அதை முடிந்தவரை குறைத்துக்கொள்ள வேண்டும்.
தொல்லை தொடர்ந்தால் வந்திருக்கும் பிரச்சனைக்குக் காரணம் உணவா, நோயா என்று மருத்துவரிடம் பரிசோதித்து, சிகிச்சை பெறுவது இதைத் தீர்க்க உதவும்.