மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Thursday, 7 February 2019

இதை எல்லாம் அவசியம் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள்...!!

         குழந்தைகளுக்கு சிறு வயதில் சொல்லிக்கொடுப்பதை தான், அவர்கள் காலம் முழுவதும் பின்பற்றுவர்கள். குழந்தைகளுக்கு இளம்பருவத்தில் இருந்தே சில நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும்.


உணவு :
    குழந்தைகளுக்கு காலை உணவை சரியான நேரத்தில் சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும். மேலும் குறைந்த கொழுப்பு உள்ள உணவுகளை சாப்பிட நீங்கள் அறிவுறுத்தவேண்டும். குழந்தைகளுக்கு நொறுக்கு தீனிக்கு பதிலாக முழு தானியங்கள் கொண்ட உணவுகளை சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும். இது அவர்களின் உடல் வளர்ச்சியை சிறப்பான அளவில் மேம்படுத்தும். காலை உணவுகளில் அதிக அளவு தானியங்களை சேர்த்துக்கொண்டால் நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயத்தை குறைக்கலாம்.

பழங்கள், காய்கறிகள்:
         பல்வேறு விதமான நிறங்கள் கொண்ட பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது விளையாட்டிற்கு மட்டுமே அல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும் தான். உங்கள் குழந்தைகளுக்கு அனைத்து உணவுகளைச் சாப்பிட பழக்குங்கள். 

விளையாட்டுகள் :
       குழந்தைகளுக்கு பிடித்தமான விளையாட்டுகளை விளையாட அனுமதியுங்கள். இது அவர்களின் மனதை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கவும், உடல் வளர்ச்சியடைவும் உதவுகின்றன. குழந்தைகளுக்கு நீச்சல், வில் வித்தை, மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற பயிற்சிகளை சொல்லி கொடுக்க வேண்டும்.

வாசிப்பு திறன் :
         குழந்தைகளின் வாசிப்பு திறன் அவர்களுடைய வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தினமும் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துங்கள். உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து வாசிப்பு திறனை அவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள்.

தண்ணீர் பாட்டில் :
    பிளாஸ்டிக் பாட்டில்களில் ரசாயனங்கள் வெளிப்பட்டு நீரில் கலக்குகின்றன. எனவே குழந்தைகளுக்கு இத்தகைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

     அலுமினியம், எவர்சில்வரால் ஆன தண்ணீர் பாட்டில்களை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். முடிந்தவரை பிளாஸ்டிக் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது எப்படி என்பதை சொல்லித்தர வேண்டும்.

டிஃபன் பாக்ஸ் :
        பிளாஸ்டிக்கால் ஆன டிஃபன் பாக்ஸ்சில் உணவு சாப்பிடுவது நல்லது இல்லை. சூடான உணவுப் பொருட்கள் பிளாஸ்டிக்குடன் வேதி வினையில் ஈடுபட்டு மோசமான வேதிப் பொருட்களை வெளியிடும். எவர்சில்வரால் ஆன டிஃபன் பாக்ஸ்சில் உணவு சாப்பிடுவது நல்லது.

Pages