மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Friday, 8 February 2019

வாயு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுதலை தரும் பாவன்முக்தாசனா

செய்முறை
        தரைவிரிப்பின் மீது படுத்துக்கொள்ள வேண்டும். கைகள் உடலுக்கு அருகில் பக்கவாட்டில் தரையின் மேல் பதிந்திருக்க வேண்டும். மூச்சை இழுத்தபடி, கால்களை 90 டிகிரிக்கு செங்குத்தாக உயர்த்த வேண்டும். இப்போது, மூச்சை வெளியே விட்டபடி இரு கால்களையும் மடக்கி, கைகளை முட்டியுடன் கோத்துப் பிடித்துக்கொள்ள வேண்டும்.


        மூச்சை உள்இழுத்தபடியே தலை, தோள்பட்டை, மேல் உடலை முடிந்த அளவுக்கு முட்டி நோக்கிக் கொண்டுவர வேண்டும்.

     10 விநாடிகள் அப்படியே இருந்துவிட்டு, மூச்சை விட்டபடியே பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இப்படி, தினமும் மூன்று முறை செய்யலாம்.

குறிப்பு
      மூட்டு வலி உள்ளவர்கள், கர்ப்பிணிகள், முதுகு வலி, காலில் நரம்பு இழுக்கும் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் மாதவிலக்கு, காய்ச்சல், வயிற்றுப்போக்கு சமயத்தில் இதைச் செய்யக் கூடாது. 

பலன்கள்: 
         மலச்சிக்கல் சரியாகும். செரிமானக் கோளாறுகள் நீங்கும். உடலில் உள்ள கெட்ட வாயு, மலக்காற்று வழியாகப் பிரியும். வாயு தொடர்பான வலி, பிடிப்பு ஆகிய பிரச்சனைகளிலிருந்து விடுதலை பெறலாம். இடுப்புத் தசைகள் வலுவடையும். மாதவிலக்கு வலி வருவது தடுக்கப்படும். குழந்தையின்மைப் பிரச்சனை சரியாகும். வயிறு அழுத்தப்பட்டு, தொப்பை கரையும். ஊட்டச்சத்து கிரகிக்கும் தன்மை அதிகரிக்கும். பெருங்குடல் இயக்கம் சீராகும். செரிமான மண்டலம் தொடர்பான பிரச்னைகள் விலகும்.

Pages