The next day, the crow was flying over the King′s palace. It saw the Princess wearing an expensive necklace. Suddenly it picked up the necklace in her beak and flew off to her nest.
When the Princess saw the crow flying off with her necklace, she screamed, ′Somebody help, the crow has taken my necklace′.
Soon the palace guards were running around in search of the necklace. Within a short time, the guards found the crow. They founded the necklace in its beak.
The crow now dropped the necklace into the snake′s hill. When the snake heard the noise, it came out of its pit. The palace guards saw the snake. ′A snake! Kill it!′ they shouted. With big sticks, they beat the snake and killed it.
Then the guards took the necklace and went back to the princess. The crow was happy and think ′Now my eggs will be safe,′. It lived a happy and peaceful life.
ஒரு காலத்தில், காகம் ஒன்று மரத்தில் கூட்டைக் கட்டியது. அந்த மரத்தின் கீழ், பாம்பு ஒன்று வாழ்ந்து வந்தது. காகம் முட்டைகளை இடும் போதெல்லாம், பாம்பு அவற்றை உண்டுவிடும். காகம் மிகவும் கோபமடைந்து பாம்பிற்கு பாடம் புகட்ட வேண்டும் என்று முடிவு செய்தது.
அடுத்த நாள், காகம் ராஜாவின் அரண்மனைக்கு மேலே பறந்து கொண்டிருந்தது. விலையுயர்ந்த கழுத்து மாலையை இளவரசி அணிந்த கொண்டிருப்பதை காகம் கவனித்தது. திடீரென்று அந்த கழுத்து மாலையை காகம் தனது அலகினால் கவ்விக் கொண்டு கூட்டை நோக்கி பறந்து வந்தது.
காகம் தன்னுடைய கழுத்து மாலையுடன் பறந்து கொண்டிருப்பதை கவனித்த இளவரசி, 'யாராவது உதவி செய்யுங்கள், காகம் என்னுடைய கழுத்து மாலையை எடுத்துக் கொண்டு போய்விட்டது" என்று அலறினாள்.
விரைவில் அரண்மனை காவலாளிகள் கழுத்து மாலையை தேடிக் கொண்டு ஓடினார்கள். சிறிது நேரத்திற்குள் காவலாளிகள் காகத்தை கண்டார்கள். அதன் அலகில் கழுத்து மாலை இருப்பதை காவலாளிகள் கவனித்தார்கள்.
காகம் இப்போது அந்த கழுத்து மாலையை பாம்பு புற்றுக்குள் போட்டு விட்டது. பாம்பு அந்த சத்தத்தை கேட்ட போது, அது அதன் புற்றிலிருந்து வெளியே வந்தது. அரண்மனை காவலர்கள் அந்த பாம்பை பார்த்தார்கள். 'பாம்பு! அதைக் கொன்று விடுங்கள்! "என்று கூச்சலிட்டார்கள். பெரிய குச்சிகளைக் கொண்டு, பாம்பை அடித்து அதை கொன்றுவிட்டார்கள்.
பின்னர் காவலாளிகள் கழுத்து மாலையை எடுத்துக் கொண்டு இளவரசியிடம் திரும்பிச் சென்றனர். காகம் 'இப்போது என் முட்டை பாதுகாப்பாக இருக்கும்," என்று நினைத்து, மகிழ்ச்சியாகவும் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்தது.