ஒரு அடர்ந்த காட்டில் சிங்கம் ஒன்று பசியின் காரணமாக மானை துரத்தியது. சிங்கத்திடமிருந்து மான் தப்பித்து விட்டது. சிங்கம் ஏமாற்றத்துடன் திரும்பியது. ஓடும்போது மானுக்கு பல இடங்களில் காயம் பட்டு ஒரு இடத்தில் விழுந்தது.
இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த நரி, மானை எப்படியாவது உண்ண வேண்டும் என்று எண்ணியது. சிறிது தொலைவில் இருந்து பேச்சு கொடுத்துக் கொண்டே அருகில் சென்றது. மானும், நரி தனக்கு உதவி செய்ய தான் வருகிறது என்று எண்ணி நம்பிவிட்டது. நரி மகிழ்ச்சியுடன் மானுக்கு அருகில் சென்றது. மான் தனக்கு உதவி செய் என்று கூறும்போதே நரி மானின் தொண்டை பகுதியை கடித்தது, மானும் இறந்து போனது. தன் பசியினை தீர்த்துக்கொண்டது நரி.
நீதி : யாரையும் குருட்டுத்தனமாக நம்பி விடக் கூடாது.