மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Wednesday, 20 February 2019

விடுகதைகள்


1. தலையுண்டு முடியில்லை, உடல் உண்டு கால் இல்லை, நிறுத்தினால் நிற்பான்...


2. நிம்மதிக்கு விரியும் நிலை மாறினால் சுருங்கும்.

3. ஓடும் குதிரை, ஒளியும் குதிரை, தண்ணீரைக் கண்டால் தவிக்கும் குதிரை.

4. காதைப் பிடித்து அழுத்தினால் கண்ணீர் விட்டு அழும்.

5. ஊரெல்லாம் ஊளையிட்டுச் செல்வான்.

6. பிறர் மானம் காப்பான்.

7. உலர்ந்த கொம்பிலே மலர்ந்த பூ.

8. அன்றாடம் தேயும் ஆண்டி.

9. நீர் ஊற்றினால் மறையும் நீர் வற்றினால் விளையும்.


விடைகள்:

1. குண்டூசி, 
2. பாய், 
3. செருப்பு,
4. தண்ணீர் குழாய், 
5. புகைவண்டி, 
6. ஆடை, 
7. குடை, 
8. தினசரி காலண்டர், 
9. உப்பு

Pages