மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Friday, 22 February 2019

படித்ததில் பிடித்தது !!


      90 வயசான ஒருத்தர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 50 கோடி பரிசு கிடைத்தது. அவரோட குடும்பத்தினர் இந்த விஷயத்தை அவரிடம் எப்படி சொல்வது..... திடீர்னு... சொன்னா ஒருவேளை... அதிக சந்தோஷத்துல... 'பொசுக்குன்னு போய்ட்டார்னா" யோசனை செஞ்சு பாத்துட்டு... ஒரு டாக்டர் கிட்ட போனாங்க..

      விஷயத்தை கேட்ட டாக்டர் 'ஒ... அவ்வளவுதானே.... நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க நா பாத்துக்கிறேன்" எப்புடி... அவர பக்குவமா... பேசி... நான் சரி பண்றேன்னு மட்டும் பாருங்க.... பேசி மடக்குரதுல நான் பெரிய எக்ஸ்பர்ட் ஆச்சே...

     ஊர்க்கதை எல்லாம்.. பேசிட்டு மெல்லமா 'ஐயா ஒரு பேச்சுக்கு கேட்கறேன்.... உங்களுக்கு லாட்டரியில 50 கோடி விழுந்தா என்ன பண்ணுவீங்க...." 

      அதுக்கு அந்த வயசானவர், என்ன... டாக்டர் சார் இப்புடி கேட்குறீங்க... நீங்க ஆஸ்பிட்டல் கட்டுரீங்க இல்லையா... உங்களுக்கு ஒரு அம்பது லட்சத்தை... தூக்கிக் கொடுப்பேன்...

   படார்னு ஒரு சத்தம்... இத கேட்ட டாக்டர் மயக்கம் போட்டு விழுந்திட்டாரு.. பிறகு எழுந்திருக்கவே இல்ல. 

Pages