மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Monday 11 February 2019

கத்தி முனை... விவேகானந்தரை சோதித்த தாய்...


         விவேகானந்தருக்கு துறவறத்தின்; மீது பற்று வந்தது. அதை தன் தாயிடம் தெரிவித்தார். அப்போது அவரின் தாயார் கத்தி ஒன்றை எடுத்துவருமாறு கூறினார். விவேகானந்தரும் கத்தியை எடுத்து வந்தார். ஆனால், அவரது தாயாரோ, 'இன்னும் உனக்கு துறவறம் மேற்கொள்வதற்கான பக்குவம் ஏற்படவில்லை" என கூறிவிட்டார்.

      ஒவ்வொரு முறையும் விவேகானந்தர் துறவறம் பற்றி பேச்சு எடுக்கும் போதெல்லாம் கத்தியை எடுத்துவருமாறு அவரின் தாயார் கூறுவார். பிறகு அவருக்கு பக்குவம் வரவில்லை எனக்கூறி நிராகரித்துவிடுவார். ஆனால், ஒருசமயம் அவ்வாறு கேட்டபோது விவேகானந்தரின் துறவறத்துக்கு அவரின் தாயார் சம்மதம் தெரிவித்துவிட்டார்.

         இதனால், அவருக்கு மிகுந்த சந்தேகம் எழுந்தது. அதைத் தன் தாயிடமே வினவினார். அதற்கு அவரின் தாயாரோ 'துறவறம் மேற்கொள்பவர்கள், அடுத்தவர்களின் துன்பத்தை தன் துன்பமாக எண்ணிச் செயல்பட வேண்டும். ஒவ்வொருமுறையும் நீ என்னிடம் கத்தியை எடுத்துவந்து கொடுக்கும்போது, அதன் கூர்மையான பகுதி, என்னை நோக்கி இருக்குமாறு தருவாய். ஆனால், இம்முறை கத்தியின் கைப்பிடி இருந்த பகுதியை என்னிடம் தந்தாய். இதன்மூலம் உனக்கு துறவறம் மேற்கொள்வதற்கான தகுதி வந்துவிட்டது எனத் தெரிகிறது. ஆகையால் தற்போது நீ துறவறம் மேற்கொள்ளலாம்" என்றார்.

Pages