சமையல் அறையில் கை தவறுதலாக உப்பும் சர்க்கரையும் இரண்டறக் கலந்து விட்டது; இதைப் பிரிக்க முடியாது என்பது உண்மை.
ஆனால் வேதியியல் கோட்பாடு அடிப்படையின்படி பிரிக்கலாம். எத்தனால் போன்ற ஆல்கஹாலில் சர்க்கரை, உப்புக் கலவையைக் கரைக்கவும். இதில் உப்பு ஆல்கஹாலில் கரையாது; சர்க்கரை கரைந்துவிடும். வடிகட்டி மூலம் இக்கரைசலில் இருந்து உப்பை முதலில் பிரித்து விடலாம். உப்பின் அளவு சராசரி 100 மைக்ரான் என்பதால், நுண்ணிய வடிகட்டியைப் பயன்படுத்த வேண்டும். இப்போது சர்க்கரை, ஆல்கஹால் கரைசலை சூடேற்றினால் ஆல்கஹால் ஆவியாக, சர்க்கரை கீழே தங்கிவிடும். ஆல்கஹால் தீப்பிடிக்கும் தன்மை கொண்டது என்பதால் கவனத்துடன் செய்து பாருங்கள்.