மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday, 2 February 2019

சிந்தனை துளிகள்..!


இதயத்தில் பெருந்தன்மை இருந்தால் அது நற்பண்புகளை அழகாக பிரகாசிக்கும். நல்ல காரியங்களைத் தாமதமின்றி உடனே செய்.


தன்னம்பிக்கை தெளிவு துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவரை எப்போதும் காப்பாற்றும்.

மாபெரும் செயல்களை சாதிக்க மனதில் தன்னம்பிக்கை பொங்கி வழிய வேண்டும்.

நல்ல பண்புகளை குழந்தைகளிடம் விதைத்தால் நல்ல மனிதனாக உருவாகிவிடுவார்கள்.

கலங்காத உறுதியே கரை சேர்க்கும்.

பொங்கும் கடலின் நடுவே அமைதியான தீவு இருப்பதுபோல, வாழ்வே போர்க்களமாக இருந்தாலும் அமைதியாக இருக்க வேண்டும். அந்த அமைதியே வாழ்வை எதிர்கொள்ளும் சக்தியை வழங்கும்.

மற்றவர் மீது அன்பு காட்டும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள். 

அந்தஸ்து பாராத அணுகுமுறையும் உள்ளன்பும் வேண்டும்.

அன்பு நிறைந்த ஒருவரால் விலங்குகள் படும் துன்பத்தைக்கூட தாங்க முடியாது.

Pages