மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Thursday 28 February 2019

நினைத்து பார்க்க வேண்டும்


      In a province, there lived a person named Ahmed and he was a shepherd. He was a good man and a wise man. The king selected Ahmed as governor of five years. 

       Some people don′t like Ahmed. They went to the king and said, ′Ahmed is a thief. He steals money from the people. He keeps the money in a box. He takes the money always with him on his camel.′ 

       The king went to Ahmed′s province. Ahmed was riding on his camel with a box in front of him. The king was angry. He said to Ahmed, ′Open your box now. I want to look into it.′ Ahmed opened the box. There was a coat for the shepherd in the box. 

        Ahmed said to the king in a humble voice, ′This coat teaches me a lesson. I look at it often. I think of my past and I feel humble.′ 

       The king was glad. He made Ahmed as Governor of one more province. Thereafter the people of the whole country liked Ahmed.

Moral : You have to think about the past.

          ஒரு மாகாணத்தில் அஹமது என்ற ஒரு நபர் வாழ்ந்து வந்தார், அவர் ஆடு மேய்ப்பாளர். அவர் ஒரு நல்ல மனிதரும், ஞானமுள்ளவரும் கூட. ஒருமுறை ராஜா அஹமதை ஐந்து ஆண்டு காலத்திற்கு ஆளுநராக தேர்ந்தெடுத்தார்.

      ஒரு சில மக்களுக்கு அஹமதை பிடிக்காது. அவர்கள் அரசனிடம் சென்று, 'அஹமத் ஒரு திருடன். அவர் மக்களிடமிருந்து பணத்தை திருடிக் கொண்டு, அந்த பணத்தை ஒரு பெட்டியில் வைத்துக் கொள்வார். அந்த பெட்டியை எப்பொழுதும் அவருடைய ஒட்டகத்துடனே வைத்துக் கொள்வார்" என்றனர். 

     அரசன் அஹமத்தின் மாகாணத்திற்கு சென்றார். அஹமத் அந்த பெட்டியுடன் ஒட்டகத்தின் மீது சவாரி செய்வதை கண்டு கோபமடைந்து, அஹமதிடம், 'இப்போது உங்கள் பெட்டியைத் திறங்கள், நான் அதை பார்க்க வேண்டும்" என்றார். அஹமது பெட்டியை திறந்தார். அதில் ஆடுமேய்ப்பவர் போட்டிருக்கும் மேல்சட்டை இருந்தது.

         பிறகு அஹமது அரசனிடம் தாழ்மையுடன் 'இந்த மேல்சட்டை எனக்கு ஒரு பாடத்தை கற்றுக் கொடுக்கிறது. நான் அடிக்கடி அதை பார்ப்பேன். என் கடந்த காலத்தைப் பற்றி நினைத்து மிகவும் தாழ்மையுடன் உணர்வேன்" என்றார்.

    இதைக் கேட்ட ராஜா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். மற்றொரு மாகாணத்திற்கும் அஹமதை ஆளுநராக நியமித்தார். அதன்பின் நாட்டிலும் உள்ள மக்கள் அனைவரும் அஹமதை விரும்ப ஆரம்பித்தார்கள்.

நீதி : கடந்த காலத்தை பற்றி நினைத்து பார்க்க வேண்டும்.

Pages