மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday, 2 February 2019

இந்த டீ-யில் இவ்வளவு நன்மைகளா…..?

        கிரீன் டீ நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஒன்றாக கருதப்படுகிறது. இந்த டீ முழுமையான இயற்கை குணங்களை கொண்டது.

      க்ரீன் டீ பயன்படுத்தும் பலர், இதன் தூள்களை தான் பயன்படுத்துகின்றனர். இந்த க்ரீன் டீயை தூளாக கலந்து குடிப்பதை விட, தூளுக்கு பதிலாக இலைகளை பயன்படுத்துவது நல்லது. இலைகளை பயன்படுத்தும் போது, அந்த டீயின் உள்ள முழுமையான நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

      நாம் விருப்பப்படும் போதெல்லாம் க்ரீன் டீ குடிப்பது தவறு. ஒரு நாளைக்கு 3 முறை க்ரீன் டீ குடிப்பது நல்லது. ஆனால் காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பது தவறு. அப்படி குடிக்கும் போது செரிமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதேபோல் போல் உறங்க செல்வதற்க்கு முன்பு டீ குடிக்க கூடாது.

      இதில் உள்ள பாலிப்பினால் என்னும் சத்து நமது உடலில் உள்ள கொழுப்பை கரைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது.

   க்ரீன் டியில் புற்றுநோயை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் உள்ளது. 

     க்ரீன் டீயை தொடர்ந்து குடிக்கும் போது, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. 

     க்ரீன் டீயை தொடர்ந்து குடிக்கும் போது இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

      இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதுடன், இரத்த ஓட்டத்தை சீராக்கி மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது.

Pages