இறைவன் கொடுத்த இயற்கை அனைத்துமே ஏதோ ஒரு விதத்தில் நமது வாழ்வில் நன்மை பயக்குவதாக தான் உள்ளது. ஆனால் நாம் அதிகமாக செயற்கையை தான் தேடுகிறோம்.
என்றைக்கு நாம் இயற்கையான உணவு பொருட்கள் மற்றும் மருத்துவ முறைகளே மறந்தோமே அன்றிலிருந்தே நமது வாழ்வில், உடல் ஆரோக்கியத்தில் பல பிரச்சனைகளை தொடங்கிவிட்டது.
தாமரை தண்டு
தாமரைப்பூ நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இந்த பூவில் உள்ள தண்டு பல மருத்துவ குணங்களை கொண்டது. இந்த தண்டில் நமது உடலுக்கு தேவையான பல சத்துக்கள் உள்ளது.
தாமரை பூவின் தண்டை உரித்தால் வெள்ளையாக இருக்கும். இதில் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் உள்ளது. இதில் மாவுசத்து, புரதம், கனிமம் மற்றும் சில வேதி பொருட்களும் உள்ளது.
முதுமை
தாமரை தண்டை நமது உடலில் சேர்த்து கொள்வதால், இது முதுமை அடைவதை தடுக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் நீண்ட காலம் உயிர் வாழ்வதற்கு தாமரை தண்டை பச்சையாக சமைத்து சாப்பிட்டாலே போதுமானது.
வெப்பம்
உடலில் எப்போதும் வெப்பம் அதிகமாக இருப்பவர்கள் இந்த தண்டை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இந்த தண்டு நீருக்கடியில் விளைவதால், இது மிகவும் குளிச்சியானது. எனவே இது வயிற்றிலும், இரத்தத்திலும் உள்ள வெப்பத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கசடு
இந்த தண்டினை நமது உணவில் சேர்த்து கொள்ளும் போது, உடலில் உள்ள கசடுகளை வெளியேற்றுகிறது. குழந்தை பெற்ற பிறகு தாயின் வயிற்றில் தங்கியிருக்கும் கசடுகளை வெளியேற்ற இது உதவுகிறது.
இரத்த வாந்தி
அடிக்கடி இரத்த வாந்தி எடுப்பவர்களுக்கு, தாமரை தண்டு ஒரு சிறந்த மருந்து. இவர்கள் தாமரை தண்டில் உள்ள கணுக்களை, வெல்லத்துடன் சேர்த்து உண்டு வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து விடுதலை பெறலாம்.
உடல் மெலிவு
உடல் எடை அதிகரிக்க வேண்டும் என விரும்புபவர்கள் இதனை தங்களது உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. தாமரை தண்டில் அதிகமான கலோரிகள் இருப்பதால், இது உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.