மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Sunday, 24 February 2019

கோபத்தின் பரிசு..

Buddha and Angry Man..!
       One day Buddha was walking through a village. A very angry and rude young man came and shouted, ′You have no right to teach others′. 


     Buddha was not upset by these insults. Instead, he asked the young man ′Tell me if you buy a gift for someone and that person does not take it to whom does the gift belong?′. 

      The man was surprised by the question and answered, ′It belongs to me. Because I bought the gift′. 

     The Buddha smiled and said, ′That is correct. And it is exactly the same as your anger. If you become angry with me and I don′t get insulted, then the anger falls back on you. Then you are the only one who becomes unhappy, not me. All you have done will hurt yourself. If you want to stop hurting yourself, you must get rid of your anger and become loving instead. When you hate others, you become unhappy. But when you love others, everyone will be happy′. 

    The person realized his mistake and apologized to the Buddha.

       ஒரு நாள் புத்தர் ஒரு கிராமத்தின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மிகவும் கோபமாகவும் முரட்டுத்தனமாகவும் இருந்த ஒரு இளைஞன் புத்தரிடம் வந்து, 'மற்றவர்களுக்கு போதனை செய்ய உங்களுக்கு உரிமை இல்லை" என்று அவமதித்து கத்தினான். 

    புத்தர் இந்த அவமதிப்பினால் வருத்தப்படவில்லை. அதற்கு பதிலாக அவர் அந்த இளைஞனிடம் 'நீங்கள் ஒருவருக்காக ஒரு பரிசை வாங்குகிறீர்கள், அந்த நபர் அதை வாங்கிக் கொள்ளவில்லை, அந்த பரிசு யாருக்கு சொந்தமானது?" என்று கேட்டார்.

      அந்த கேள்வியை கேட்ட அந்த மனிதன் மிகவும் ஆச்சரியப்பட்டு, 'அது எனக்கு சொந்தமானது, ஏனெனில் நான் தான் அந்த பரிசை வாங்கினேன்" என்று பதிலளித்தான். 

    புத்தர் சிரித்துக் கொண்டே 'அது சரிதான். இது உங்கள் கோபத்தோடு முற்றிலும் ஒத்திருக்கிறது. நீங்கள் என்மீது கோபம் கொண்டால், நான் அவமதிக்கபட மாட்டேன், அந்த கோபம் உங்கள் மீது தான் விழும். பிறகு நீங்கள் மட்டும் தான் மகிழ்ச்சியில்லாமல் இருப்பீர்கள், நான் அல்ல. நீங்கள் செய்த தீங்கு அனைத்தும் உங்களையே காயப்படுத்தும். நீங்கள் உங்களை காயப்படுத்த விரும்பவில்லை என்றால், உங்களுடைய கோபத்தை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக அன்பாக இருக்க வேண்டும். நீங்கள் மற்றவர்களை வெறுக்கிறபோது, நீங்கள் மகிழ்ச்சியற்றவர்களாக இருப்பீர்கள். ஆனால் நீங்கள் மற்றவர்களை நேசிக்கும்போது அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்" என்றார். 

    அந்த நபர் அவருடைய தவறை உணர்ந்து புத்தரிடம் மன்னிப்பு கேட்டார். 

Pages