🌹1912 – முதன் முதலில் பறக்கும் விமானம் ஒன்றிலிருந்து ஆல்பேர்ட் பெரி என்பவர் பாரசூட்டில் இருந்து குதித்தார்.
🌹1949 – டச்சுக்களிடம் இருந்து யாக்யகர்த்தாவை இந்தோனீசியா கைப்பற்றியது.
🌹1953 – ஜோசப் ஸ்டாலினுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. நான்கு நாட்களின் பின்னர் அவர் இறந்தார்.
🌹1966 – சோவியத்தின் வெனேரா 3 விண்கலம் வீனஸ் கோளில் மோதியது. வேறொரு கோளில் இறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.
🌹1975 – ஆஸ்திரேலியாவில் வர்ணத் தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது.
🌹1977 – சார்லி சப்ளினின் உடல் சுவிட்சர்லாந்தில் அவரது கல்லறையில் இருந்து திருடப்பட்டது.
🌹1980 – சனி கோளின் ஜானுஸ் என்ற சந்திரன் இருப்பதை வோயேஜர் 1 விண்கலம் உறுதி செய்தது.
🌹1981 – ஐரியக் குடியரசு இராணுவ உறுப்பினர் பொபி சான்ட்ஸ் வட அயர்லாந்து சிறையில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
🌹1992 – பொசுனியா எர்செகோவினா யூகொஸ்லாவியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
🌹2002 – ஸ்பெயினில் யூரோ நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.