இரண்டு பேன்ட்கள் (P1, P2) மற்றும் மூன்று சட்டைகள் (S1, S2, S3) உள்ளன எனில், இவற்றைப் பயன்படுத்தி P1S1, P1S2, P1S3; P2S1, P2S2, P2S3 என ஆறு விதமாக ஆடை அணிய முடியும்.
அதுபோல, ஆறு இலக்க எண் மட்டுமே கொண்டதாக செல்போன்கள் இருந்தால் (10x10x10x10x10x10) அதாவது அதிகபட்சம் 10,00,000 செல்போன் இணைப்புகள் மட்டுமே தரமுடியும்.
இன்று இந்தியாவில் செல்போன்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தையும் தாண்டிவிட்டது. 7 இலக்க எண்களால் 10 மில்லியன், 8 இலக்க எண்களால் 100 மில்லியன், 9 இலக்க எண்களால் 100 கோடி இணைப்புகளையே தரமுடியும்.
இந்தியாவின் தற்போதைய மக்கள்தொகை 125 கோடி. எனவே, ஒன்பது இலக்க எண் கூட பற்றாக்குறையாகவே இருக்கும்.
10 இலக்கம் என்றால் மொத்தம் 1,000 கோடி இணைப்புகளைத் தரமுடியும். இதற்கும் மேலாக இந்த மக்கள் தொகையின் அளவு கூடப்போவது இல்லை. எனவேதான், உலகம் முழுவதும் பத்து இலக்க எண்முறை வழக்கில் இருக்கிறது