உண்டி சுருங்குதல் பெண்டீர்க்கு அழகு
நாம் அறிந்த விளக்கம் :
மிக அழகான பெண்கள் பக்கம் திருப்பி விடப்பட்ட பழமொழிகளில் இதுவும் ஒன்று. உணவு நிறைய சாப்பிட்டால் பெண்கள் உடல் பெருத்து அழகற்றவர்களாகி விடுவார்கள் என்று பயந்தோ என்னவோ பழமொழியையே மாற்றி விட்டார்கள். இந்தப் பழமொழியின் உண்மையான வடிவமும் சொல்லப்படும் நீதியும் ஆண்களுக்குத் தான் என அறியும்போது இதில் உள்ள அறிவியல் தத்துவமும் ஆச்சரியத்தை தருகிறது.
இந்த பழமொழியின் உண்மையான வடிவம் உண்டி சுருங்குதல் பண்டிக்கு அழகு என வந்திருக்க வேண்டும். பண்டி என்பது பெண்டீர் என மறுகி பெண்களுக்கு நல்லது என அறிவுறுத்தலாய் வந்துவிட்டது. உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை குடல் இறக்க நோய் ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள். இது தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன. இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள். ஆக உண்டி சுருக்க பொதுவாய் சொல்லித் தரப்பட்ட பழமொழி பெண்களுக்கு மட்டும் என்றாகி விட்டது