மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Monday, 11 March 2019

வரலாற்றில் இன்று: மார்ச் 11


1702: இங்கிலாந்தின் முதலாவது தேசிய நாளிதழான த டெய்லி கரண்டின் முதல் பதிப்பு வெளியாகியது.


1801: ரஷ்யாவின் முதலாம் பவுல் கொல்லப்பட்டான். அவனது மகன் முதலாம் அலெக்சாண்டர் மன்னனானான்.

1861: அமெரிக்க உள்நாட்டுப் போர் - அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது.

1864: இங்கிலாந்து ஷெஃபீல்ட் நகரில் இடம்பெற்ற செயற்கை வெள்ளப் பெருக்கினால் 250பேர் கொல்லப்பட்டனர்.

1897: மேற்கு வேர்ஜீனியாவுக்கு மேலாகப் பறந்த எரிவெள்ளி ஒன்று வெடித்து சிதறியதில் சேதம் ஏற்பட்டது.

1902: காங்கேசன்துறையில் இருந்து சாவகச்சேரி வரையான 21 மைல் நீள புகையிரதப் பாதை அமைக்கப்பட்டது.
1905: காங்கேசன்துறை முதல் மதவாச்சி வரை புகையிரதப் பாதை அமைக்கும் பணி முடிவடைந்தது.

1917: முதலாம் உலகப் போரில் பாக்தாத் பிராந்தியம் ஆங்கிலோ இந்திய படைகளிடம் வீழ்ந்தது.

1918: ரஷ்யாவின் தலைநகரம் பெத்ரோகிராட்டில் இருந்து மாஸ்கோவுக்கு மாறியது.

1931: சோவியத் ஒன்றியத்தில் "வேலைக்கும் சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாக்கவும் ஆயத்தமாயிரு" என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

1958: ஐக்கிய அமெரிக்காவின் B-47 விமானம் அணுகுண்டு ஒன்றைத் தவறுதலாக வீழ்த்தியதில் தெற்குக் கரோலினாவில் பலர் காயமடைந்தனர்.

1978: ஒன்பது பாலஸ்தீனத் தீவிரவாதிகள் இஸ்ரேலில் பேருந்து ஒன்றைக் கடத்தி 34 பொதுமக்களைக் கொன்றனர்.

1985: மிகைல் கொர்பசேவ், சோவியத் யூனியன் தலைவரானார்.

1990: சோவியத் யூனியனிலிருந்து பிரிவதாக லிதுவேனியா சுதந்திரப் பிரகடனம் செய்தது.

1990: சிலியில், பட்றிசியொ அய்ல்வின் 1970 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியானார்.

2004: ஸ்பெய்னின் மட்ரிட் நகர ரயில்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 191 பேர் பலியாகினர்.

2006: சிலியின் முதல் பெண் ஜனாதிபதியாக மிச்சேல் பாச்செலட் பதவியேற்றார்.

2007: தென் அமெரிக்காவின் வடகிழக்கில் உள்ள கயானா விண்வெளி ஏவுதளத்தில் ஏரியன் - 5 ராக்கெட் ஏவப்பட்டு வெற்றிகரமாக அது இன்சாட் - 4B என்ற இந்திய செய்மதியையும் ஸ்கைநெட் - 5A என்ற பிரித்தானியாவின் துணைக்கோளையும் சுமந்து சென்றது.

2009: ஜேர்மனியில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 பேர் பலி.

2011: ஜப்பானின் புகுஷிமா பிராந்தியத்திற்கு அருகில் ஏற்பட்ட 9.0 ரிச்டர் அளவிலான பூகம்பத்தை தொடர்ந்து தாக்கிய சுனாமியினால் சுமார் 20,000 பேர் பலியாகினர். இதன்போது அணுக்கதிர்வீச்சு கசிவும் ஏற்பட்டது.

Pages