மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Thursday, 14 March 2019

அறப்படிச்ச மூஞ்சூறு கழுநீர் பானைக்குள் விழுந்தது


அறப்படிச்ச மூஞ்சூறு கழுநீர் பானைக்குள் விழுந்தது

நாம் அறிந்த விளக்கம் :
            ஊருக்கு ஊர் இனத்துக்கு இனம் வெவ்வேறு வார்த்தை களால் பிணைத்து பயன்படுத்தப் படுகிறது. அதிகம் படிச்ச நாய் வேட்டைக்கு உதவாது என்பார்கள். இன்னும் சில இடங்களில் எல்லாம் தெரிஞ்சவர்தான் கழனிப் பானைக்குள்ளே கைய விட்டாராம் என்பார்கள். ஆக இதெல்லாம் குறிப்பது ஒன்றே ஒன்றுதான் ஆர்வகோளாறில் தெரியாத ஒன்றை செய்யப் போக அது வேறுவிதமான முடிவைத் தரும் என்பதே. ஆனால் இதன் உண்மை விளக்கம் இது அல்ல.


விளக்கம் :
    இந்த பழமொழி இந்த விளக்கங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது என்பதுதான் ஆச்சரியமான விஷயம். அதாவது அறவடிச்ச முன்சோறு கழுநீர் பானைக்குள் விழுந்தது என்பதுதான் சரியான பழமொழி. வட்டார வழக்கில் மருவி அது மேற்கண்டவாறு திரிந்தது. அதன் பொருள் ஊரில் சோற்றுப் பானையில் கஞ்சி வடிக்கையில் ஒரு சில பருக்கைககள் கஞ்சிக்குள் விழவே செய்யும். ஒரு பானை சோற்றுக்காக ஒரு சில சோறு கஞ்சிக்குள் விழுகின்றன. இதனை குறிக்கும் பழமொழி அறவடிச்ச என்பது அறப்படிச்ச என்றாகி முன் சோறு- மூஞ்சூறு ஆகிவிட்டது.

Pages