மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Sunday 17 March 2019

கோத்திரம் அறிந்து பெண் கொடு. பாத்திரம் அறிந்து பிச்சை இடு

கோத்திரம் அறிந்து பெண் கொடு. பாத்திரம் அறிந்து பிச்சை இடு 


நாம் அறிந்த விளக்கம் :
    நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண்ணை மருமகளாக்கி கொள்வதற்கும் அல்லது நல்ல குடும்பமா என ஆராய்ந்து பெண் கொடுப்பதற்கும் அடுத்து தானம் தந்தால் கூட அளவறிந்து பிச்சையிட வேண்டும் என்பதற்காகவும் பொருள் தரும்படி இருப்பதாக சிலர் கருதுகின்றனர்.


விளக்கம் :
    ஆனால் இது மன்னர் குடும்பத்திற்கு சொல்லப்பட்ட அறிவுரையாக அறியப்படுகிறது. கோ என்பது அரசன் எனப் பொருள்படும். திறம் என்பது திறன் அல்லது திறமை. அதாவது ஒரு மன்னன் தன் பெண்ணை திறமையுள்ள ஒரு அரசனாகப் பார்த்து ஆராய்ந்து மணமுடித்து தர வேண்டும் என்பதை இது குறிக்கிறது. கோத்திரம் என்பது கோத்திறம் என வரவேண்டும். அதேபோல் பாத்திரம் என்பது பாத்திறம் என வரவேண்டும். புலவனுக்கு பரிசு அளிக்க நினைக்கும் மன்னன் அந்த புலவனது பாடல் திறமைக்கு ஏற்றவாறு பரிசுகளை மதிப்பிட்டு அளிக்க வேண்டும். இதுவே இதன் விளக்கம் ஆகும்.

Pages