மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday, 16 March 2019

இன்று தேசிய தடுப்பூசி தினம்🌏🌏 மார்ச் 16


     குழந்தைகள் ஆரோக்கியமாக வளர வேண்டும் என்றால் உரிய நேரத்தில் தடுப்பூசிகள் போட்டுக் கொள்வது இன்றைய கால கட்டத்தில் அவசியமாகிவிட்டது.

   தடுப்பூசியின் தத்துவத்தை முதலில் அறிந்தவர் லூயிஸ் பாஸ்டர் (1822-1895). இவர் கோழிக்கான காலரா மற்றும் வெறிநாய்கடிக்கான தடுப்பூசியை முதலில் கண்டறிந்தார். தடுப்பூசியின் அடிப்படையை முற்றிலும் அறிந்து உலகுக்கு விளக்கிய எட்வர்டுஜென்னர் ஸ்மால் பாக்ஸ் வேக்சின் எனப்படும் பெரியம்மை தடுப்பூசியை கண்டுபிடித்தார். இதனால் பெரியம்மை நோய் அறவே ஒழிக்கப்பட்டது.

    முதன்முதலாக 1995-ம் ஆண்டு மார்ச் 16-ந் தேதி முதல் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. அந்த ஆண்டு முதல் அன்றைய தினத்தை தேசிய தடுப்பூசி தினமாக கடைபிடிப்பதாக அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். 

    இளம்பிள்ளை வாதம் என்னும் போலியோ நோயால் நாட்டில் பலர் பாதிக்கப்பட்டனர். இதை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 1957-ம் ஆண்டு ஆல்பர்ட் சாபின் என்ற அமெரிக்க டாக்டர் போலியோ நோய்க்கு தடுப்பு சொட்டு மருந்தை கண்டுபிடித்தார். இதை இந்திய அரசாங்கம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்து நோயை தடுக்கலாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தியது. அதன்படி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் 2 தவணைகளில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது. 

     இதே போல் தடுப்பூசியினால் தான் பெரியம்மை, சின்னம்மை போன்ற பல்வேறு நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டன. இதனால் தான் குழந்தை பிறந்தவுடன் போலியோ தடுப்பு மருந்து கொடுக்கப்படுகிறது. பின்னர் 15, 45 நாட்கள் என 5 வயது வரை அட்டவணை அமைத்து குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. 

     குழந்தைகளுக்கு பிசிஜி எனப்படும் தடுப்பூசி காசநோயையும், டிபிடி கக்குவான், தொண்டை அடைப்பான், ரண ஜன்னி, மீசல்ஸ் தட்டம்மை நோயை தடுக்கிறது. மஞ்சள் காமாலை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

    ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் பன்றிகாய்ச்சல், டெங்கு போன்ற நோய்கள் தடுப்பூசிகளுக்கே சவால் விடுகின்றன எனலாம். எனவே நம் நலனை காக்க குழந்தைகளுக்கு தடுப்பூசியை முறையாக போட்டு பாதுகாப்பாக வாழ்வோம்

Pages