சோவியத் விண்வெளி வீரர் அலெக்சி லியோனொவ் வாஸ்கோத் 2 என்ற விண்கலத்தின் வெளியே சுமார் 12 நிமிடங்கள் நடமாடி விண்வெளியில் நடந்த முதல் மனிதன் என்ற பெயரை பெற்றார்.
அவர், 1965-ம் ஆண்டு மார்ச் மாதம் இதே நாளில் விண்வெளியில் நடந்து இந்த சாதனையை படைத்தார். இவர் தற்போது பணி ஓய்வில் இருக்கிறார். இவரது சாதனையை பாராட்டி சோவியத் ஒன்றிய அஞ்சல் தலையில் இவர் விண்வெளியில் நடந்த உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இரண்டு தடவை சோவியத் ஒன்றியத்தின் ஹீரோ என்ற விருதையும், லெனின் விருதையும் பெற்றுள்ளார்.
பிற நிகழ்வுகள்:-
* 1241 - போலந்தின் கிராக்கோவ் நகரம் மங்கோலியர்களினால் சேதமாக்கப்பட்டது.
* 1850 - அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
* 1913 - கிரேக்கத்தின் முதலாவது ஜார்ஜ் மன்னன் படுகொலை செய்யப்பட்டான்.
* 1944 - இத்தாலியில் வேசூவியஸ் மலை தீக்கக்கியதில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
* 1945 - இரண்டாம் உலகப் போர்: 1,250 அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் பெர்லின் நகரைத் தாக்கின.
* 1953 - மேற்கு துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக 250 பேர் கொல்லப்பட்டனர்.
* 1962 - அல்ஜீரிய விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.
* 1971 - பெருவில் நிலச்சரிவு காரணமாக 200 பேர் கொல்லப்பட்டனர்.